உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை(File) நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினம் ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும்.
ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும். கரப்ட், ரேகோவேரி, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை மீட்க டிஸ்க் டிக்கர் (DiskDigger) எனும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கோப்புகளை மீட்க முடியும்.
சில கணினி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் கரப்ட் பைல் கண்டிப்பாக இருக்கும், பெரும்பாலும் இந்த வகையான பிரச்சனை விண்டோஸ் அதிகமாக பாதிக்கப்படும். இது போன்ற பிரச்சணைகளுக்கு கண்டிப்பாக டெஸ்ட் டிஸ்க் மற்றும் RecoverMyFiles எனும் கோப்புகளைபயன்படுத்துவது மிகவும் நல்லது.
உடைந்த சில ஹார்ட் டிரைவ்-ல் இருந்து கூட பல்வேறு கோப்புகளை மீட்க முடியும், அதற்கு Kroll OnTrack எனும் வலைதளத்தை பயன்படுத்தி மிக எளிமையாக ஹார்ட் டிரைவ்-ல் உள்ள புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள் போன்றவற்றை மிட்க முடியும். சில நிறுவனங்களில் ஹார்ட் டிரைவ் கோப்புகளை எளிமையாக மீட்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ஹார்ட் டிரைவ்-ல் உள்ள கோப்புகளை மீட்பது மிகவும் கடினம்.
டிஸ்க் டிக்கர்
டிஸ்க் டிக்கர் பயன்படுத்தி கண்டிப்பாக உங்கள் கணினி மற்று லேப்டாப்பில் உள்ள கோப்புகளை எளிமையாக மீட்க முடியும், அதற்கு முதலில் டிஸ்க் டிக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்யவும்.
அடுத்து உங்கள் கணினியில் உள்ள போல்டர்-ஐ தேர்வு செய்ய வேண்டும், பின்பு நீக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.
அடுத்து பட்டியலிடப்பட்ட உங்கள் போட்டோ, வீடியோ போன்ற பல்வேறு கோப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்யவேண்டும். பின்பு நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எளிமையாக மீட்க முடியும்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…