இனி கவலை வேண்டாம்..டெலிட் ஆன ஃபைல்களை இலவசமாக ரிக்கவர் செய்யலாம்..!!

Default Image

 

உங்கள் கணினி, லேப்டாப், ஸ்மார்ட்போன் சாதனங்களில் தற்செயலாக கோப்புகளை(File) நீக்குவது எளிது, ஆனால் திரும்ப அந்த கோப்புகளை மீட்பது மிகவும் கடினம் ஆனால் சில வழிமுறைகள் மூலம் நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எடுக்க முடியும்.

ஆன்லைனில் பல்வேறு இலவச செயலிகள் உள்ளது அவற்றைப் பயன்படுத்தி கோப்புகளை எடுக்க முடியும். கரப்ட், ரேகோவேரி, ரீஃபார்மேட் செய்யப்பட்ட டிரைவ்கள் மூலம் அழிக்கப்பட்ட தரவுகள் யுஎஸ்பி ப்ளாஷ் டிரைவ், மெமரி கார்டு, எம்பி3 பிளேயர் என எந்த கருவியில் இருந்தாலும் அவைகளை மீட்க டிஸ்க் டிக்கர் (DiskDigger) எனும் செயலியை பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக கோப்புகளை மீட்க முடியும்.

உங்கள் கணினி அல்லது லேப்டாப் போன்ற சாதனங்களில் கோப்புகளை டெலிட் செய்தால், உடனே அவற்றில் இருக்கும் ரீசைக்கிள் பின்-ல் உங்கள் கோப்புகள் இருக்கும், அவற்றை உடனே கிளிக் செய்வதன் மூலம் அந்த கோப்புகளை பெற முடியும். மேலும் கணினியில்உள்ள மெனுவில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கோப்புகளை சேமிக்க முடியும். குறிப்பாக கணியில் உங்கள் எஸ்டி கார்டு மற்றும் யுஎஸ்பி ஃப்ளாஷ் போன்றவற்றை இயக்கியில் இருந்திருந்தால், அவற்றில் உள்ள கோப்புகளை மறுபடிம் கொண்டுவருவது மிகவும் கடினம்.

ரிக்குவா,பான்டா ரிக்கவரி, டெஸ்ட் டிஸ்க்,Paragon Rescue Kit 14 Free, Minitool Partition Wizard Free Edition 9.1போன்ற மென்பொருள்களை உபயோகப்படுத்தி நீங்கள் டெலிட் செய்தகோப்புகளை மிக எளிமையாக மீட்க முடியும்.

சில கணினி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் கரப்ட் பைல் கண்டிப்பாக இருக்கும், பெரும்பாலும் இந்த வகையான பிரச்சனை விண்டோஸ் அதிகமாக பாதிக்கப்படும். இது போன்ற பிரச்சணைகளுக்கு கண்டிப்பாக டெஸ்ட் டிஸ்க் மற்றும் RecoverMyFiles எனும் கோப்புகளைபயன்படுத்துவது மிகவும் நல்லது.

உடைந்த சில ஹார்ட் டிரைவ்-ல் இருந்து கூட பல்வேறு கோப்புகளை மீட்க முடியும், அதற்கு Kroll OnTrack எனும் வலைதளத்தை பயன்படுத்தி மிக எளிமையாக ஹார்ட் டிரைவ்-ல் உள்ள புகைப்படங்கள், கோப்புகள், வீடியோக்கள் போன்றவற்றை மிட்க முடியும். சில நிறுவனங்களில் ஹார்ட் டிரைவ் கோப்புகளை எளிமையாக மீட்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ஹார்ட் டிரைவ்-ல் உள்ள கோப்புகளை மீட்பது மிகவும் கடினம்.

டிஸ்க் டிக்கர்

டிஸ்க் டிக்கர் பயன்படுத்தி கண்டிப்பாக உங்கள் கணினி மற்று லேப்டாப்பில் உள்ள கோப்புகளை எளிமையாக மீட்க முடியும், அதற்கு முதலில் டிஸ்க் டிக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் சாதனத்தில் இன்ஸ்டால் செய்யவும்.

அடுத்து உங்கள் கணினியில் உள்ள போல்டர்-ஐ தேர்வு செய்ய வேண்டும், பின்பு நீக்கப்பட்ட கோப்புகள் அனைத்தும் பட்டியலிடப்படும்.

அடுத்து பட்டியலிடப்பட்ட உங்கள் போட்டோ, வீடியோ போன்ற பல்வேறு கோப்புகளை தேர்வு செய்து கிளிக் செய்யவேண்டும்.  பின்பு நீங்கள் டெலிட் செய்த கோப்புகளை எளிமையாக மீட்க முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்