தீபாவளி தமாக்கா ! ‘iQOO 12’ போன் விரும்பிகளுக்கு அட்டகாசமான ஆஃபர்!

சந்தையில் கடந்த 10 மாதங்களாக விற்பனையில் இருந்து வரும் iqoo12 போன்-க்கு தீபாவளியையொட்டி ஆஃபர் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

iQOO 12 (5G) offer

சென்னை : சந்தைகளில் ஐ-போன்களுக்கு இணையாக தற்போது விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்று தான் iQ போன். என்னதான் சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற பிராண்ட் போன்கள் இருந்தாலும் iQ போன்களுக்கென ஒரு வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக iQ போன்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் அதிகமாக “iQOO 12” மாடலை வாங்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதற்கான முக்கிய காரணமாக விலை அதிகமாக இருந்தாலும், அதற்கு ஓர்த்தாக சிறப்பு அம்சங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில், அதனுடைய சிறப்பு அம்சங்கள் என்ன எனவும்,  போனை வாங்கி விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி வரவிருக்கும் ஆபர் குறித்தும் பார்ப்போம்.

சிறப்பு அம்சங்கள் 

கேமரா :இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில் அட்டகாசமாக தான் கொடுத்திருக்கிறார்கள்.  பின் புறம் 50MPயுடன், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 32 எம்பி செல்பி கேமராவுடன் வருகிறது. எனவே, இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருபவர்கள் புகைப்படதிற்கும், முக்கியமான நிகழ்வை படம்பிடிக்கவும் அருமையாக இருப்பதாக தெரிவித்து இருந்தார்கள்.

பேட்டரி : இந்த போன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. 5000mAh என்றாலும் அதிக நேரம் உபயோகிக்கும் வகையிலே ஒரு தரமான வடிவமைப்பை கொண்டுள்ளது என கூறுகின்றனர். அத்துடன் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. எனவே, போனை 0 சதவீதத்தில் சார்ஜ் போட்டால் 20 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

டிஸ்ப்ளே : இந்த போன் 6.67-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும், 2400 x 1080 பிக்சல்கள் கொண்டுள்ளது. எனவே, படம் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த போன் திருப்தியான ஒரு அனுபவத்தை கொடுக்கும். மேலும், இந்த போனில் 2k தரம் வரை வீடியோக்களை பார்த்து கொள்ள முடியும்.

ரேம் & ஸ்டோரேஜ் : இந்த போன் 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரு மாடலிலும், 16ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் என மற்றொரு மாடலிலும் இருக்கிறது.

வெர்ஷன் :இந்த போனானது Qualcomm Snapdragon 8 Gen 3 வெர்ஷனை கொண்டுள்ள காரணத்தால் கேம் பிரியர்கள் இந்த போனை வாங்கலாம். இதற்கு முன்னதாக போனை வாங்கியவர்கள் கூட, கேம் விளையாடும்போது எந்த விதமான lagging பிரச்சினை இல்லை என கூறினார்கள்.

மக்கள் கருத்து

இந்த போன் அறிமுகம் ஆனதை தொடர்ந்து வாங்கி பயன்படுத்தி வரும் மக்கள் கூறிய கருத்துக்களை வைத்து பார்க்கையில், பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்களை சந்திக்கவில்லை. வாங்கிய பலரும் நன்றாக இருப்பதாக தான் தெரிவித்துள்ளார்கள். ஒரு சிலருக்கு மட்டும் அதிக நேரம் கேம் விளையாடுவதனால் சார்ஜ் அந்த அளவிற்கு கை கொடுக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.

வருகிறது தீபாவளி ஆஃபர்

இந்த போன் அறிமுகம் ஆகி மாதங்கள் ஆகிவிட்டது என்றாலும் இன்னும் மவுசு மட்டும் குறையவே இல்லை. அந்த அளவுக்கு இன்னுமே, பலரும் இந்த போனை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அறிமுகம் ஆகும்போது 12 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.60,000க்கும், 16 ஜிபி ரேம் கொண்ட மாடல் ரூ.64,000 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இப்போது விலை குறைக்கப்பட்டு iQ இணையத்தளத்தில் 12 ஜிபிரேம் ரூ. 49,999க்கும்  16 ஜிபி ரேம் ரூ..54,000க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. இப்போது, amazon flipkart ஆகியவற்றில் பிக் பில்லியன்ஸ் ஆஃபர் போய்க்கொண்டு இருக்கிறது. அவசரமாக போனை வாங்க விரும்புபவர்கள் உடனடியாக வாங்கி கொள்ளாலாம்.

ஆனால், இப்போது விற்கப்படும் விட விலை குறையும் வகையில், ஆஃபர் வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி செய்து ஆஃபர் வரவுள்ளது வழக்கமானது.

அப்படி தான் இந்த முறை, amazon flipkart ஆகியவற்றில் “iQOO 12” போனுக்கு விலை குறைக்கும் தள்ளுபடி ஆஃபர் வருகிறதாகக் கூறப்படுகிறது. எவ்வளவு விலை குறைக்கப்படும் என்பதற்கான எந்த விவரமும் வெளியாகவில்லை என்பதால் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். ஆனால், இந்த போனை தீபாவளி பண்டிகையோடு வாங்குபவர்களுக்கு விலை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, பொறுத்திருந்து வாங்கிக்கொள்ளுங்கள்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident