அடடே இது ரொம்ப ஆச்சரியமா இருக்கே…முட்டாள் தினத்தில் ஜிமெயில்.! இந்த கதை தெரியுமா?

Gmail: கூகுள் ஜிமெயிலை சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று முட்டாள் தினம் என்று சொல்லப்படும் ஏப்ரல்1ம் தேதி தினத்தில் அறிமுகமானது.
அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஜிமெயிலுக்கு இன்று 20 வயதாகிறது. ஏப்ரல் 1, 2004ம் ஆண்டு கூகுள் ஜிமெயிலை அறிமுகம் செய்யப்பட்டது. இது கூகுள் இணை நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோரால் நகைச்சுவையாக தொடங்கப்பட்டது. முட்டாள் தினத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் இதன் தேவை மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இப்பொழுது, அதன் சில சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். ஜிமெயிலின் உருவாக்கியவரான பால் புக்கெய்ட், மின்னஞ்சலை உருவாக்குவதற்கு ஆகஸ்ட் 2001 முதல் வேலை செய்ததாக ஒரு முறை வெளிப்படுத்தியுள்ளார். கூகுள், பிளேஸ்டோர் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு கூட ஜிமெயில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறது. இந்த 20 வருட காலகட்டத்தில் தன் தனது தீம், லோகோவை பலமுறை மாற்றியுள்ளது.
அது மட்டும் இல்லாமல், மின்னஞ்சலை அனுப்பும் போது தவறுதலாக ஒரு பைலை அனுப்பியிருந்தால், அதைத் திருத்தி கொள்ளும் வசதியும் உண்டு. ஜிமெயில் தனது பயனர்களுக்காக 2015 ஆம் ஆண்டில் Undo என்ற அம்சத்தை கொண்டு வந்தது. இதன் மூலம், ஒரு தகவலை தவறாக அனுப்பினால் 30 வினாடிகளுக்கு அதனை திருத்தி கொள்ள முடியும்.
மேலும், உங்கள் ஜிமெயிலில் 20க்கும் மேற்பட்ட தேடல் ஆபரேட்டர் வசதி உள்ளது. இதை வைத்து எந்த செய்தியையும் தேடுவதற்கு இவற்றைப் பயன்படுத்தலாம். மின்னஞ்சல் அட்டவணை என்ற அம்சம் உள்ளது. அதன் மூலம் யாருக்காவது அனுப்பு வேண்டிய மின்னஞ்சலை முன்னதாகவே அனுப்பு முடியும். இதற்கு Schedule Send என்ற ஆப்ஷனை கிளிக் செய்து பலன் பெறலாம்.