ஸ்மார்ட்போன்களை குறிவைக்கும் ‘டாம்’ வைரஸ்.! எச்சரிக்கும் மத்திய அரசு.! பாதுகாப்பு நடைமுறை என்னென்ன.?
‘டாம்’ (Daam) வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரையை மத்திய அரசு வழங்கி உள்ளது.
நவீன உலகில் ஸ்மார்ட்போன் போன்ற சாதனங்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போதைய காலத்தில் விலைகுறைந்த பொருட்களில் இருந்து அதிகமான பொருட்கள் வரை அனைத்தையும் நமது கையில் உள்ள ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கிவிடுகிறோம்.
இந்நிலையில், அவற்றின் பயன்பாடுகள் அதிகரிப்பது போல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வைரஸ்களின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது இத்தகைய ஸ்மார்ட் போன்களை தாக்குவதற்காகவே புதுப்புது வைரஸ்களை சைவ தாக்குதலில் ஈடுபடுபவர்கள் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில், தற்பொழுது ‘டாம்’ (Daam) எனப்படும் ஒருவகை வைரஸ் ஆனது அனைவரது ஸ்மார்ட்போனிலும் பரவி வருகிறது.
டாம் வைரஸ் எப்படி பரவுகிறது.?
பொதுவாக அனைத்து வைரஸ்களும் தேவையற்ற செயலிகள் அல்லது இணைப்புகள் மூலமாக பரவுகிறது. அதேபோல, இந்த டாம் வைரஸும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ்களில் வரும் தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்வதன் மூலமாக மொபைல் போனில் பரவுகிறது.
டாம் வைரஸ் என்ன செய்யும்.?
ஆபத்தைத் தரக்கூடிய அனைத்து வைரஸ்களும் ஒரு சில செயல்களை செய்வதற்காக உருவாக்கப்படுகின்றன. அந்தவகையில், டாம் வைரஸ் ஆனது நமது ஸ்மார்ட்போனை தாக்கி அதன் செயல்பாடுகளை குறைத்து விடுகிறது. டாம் வைரஸ் நமது மொபைலில் நுழைந்தவுடன் ஆன்டிவைரஸ் எனப்படும் பாதுகாப்பு அமைப்பை தாண்டி வர முயற்சிக்கிறது.
அதன்பின், தொலைபேசி அழைப்பு பதிவுகள்(Call History), தொடர்புகள்(contacts), எஸ்எம்எஸ்(SMS) போன்ற முக்கிய தகவல்களை திருடிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், மொபைல் போனின் கேமராக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நமக்கே தெரியாமல் புகைப்படங்கள் மற்றும் ஸ்கிரீன் ஷாட் போன்றவற்றை எடுக்கிறது. குறிப்பாக இந்த வைரஸ் கடவுச்சொற்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவரின் சாதனத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் திருடி, அதனை ஏஇஎஸ் (Advanced Encryption Standard-AES) என்ற அல்காரிதத்தைப் பயன்படுத்தி குறியீடு (Encrypt) தகவல்களாக மாற்றுகிறது. இதன் காரணமாக கோப்புகள் சேமிப்பகத்திலிருந்து நீக்கப்பட்டு என்க்ரிப்ட் செய்யப்பட்ட கோப்புகள் மட்டுமே “.enc” மற்றும் “readme_now.txt” என்ற குறிகளுடன் சேமிப்பகத்தில் இருக்கும்.
மத்திய அரசு அறிவுரை:
தற்பொழுது, ஆண்ட்ராய்டு போன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் டாம் வைரஸ் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்வதற்கான அறிவுறையை மத்திய அரசு வழங்கி உள்ளது.
- தேவையற்ற இணையதளங்கள் மற்றும் இணைப்புகளை கிளிக் செய்வதோ வேண்டாம் எனவும் தேவையற்ற எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சலில் உள்ள இணைப்புகளையும் கிளிக் செய்யக்கூடாது எனவும் மத்திய அரசு சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
- உண்மையான மொபைல் எண்கள் போன்று தோன்றும் சந்தேகத்திற்குரிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலோ பயனர்கள் கண்காணித்து அதனை அணுகாமல் இருக்க வேண்டும்.
- “https://bit.ly/”, “\nbit.ly” மற்றும் “tinyurl” போன்ற ‘bitly’ மற்றும் ‘tinyurl’ ஹைப்பர் லிங்க்குகளை உள்ளடக்கிய இணைப்புகளில் உள்நுழையும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.