இந்தியாவில் கூல்பேட் ஏ1 மற்றும் கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் ஆகியுள்ளத. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆஃப்லைன் கடைகளில் கிடைக்கும் என்றுத் தகவல் தெரவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹரியானா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு,ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற முக்கிய நகரங்களில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் ஆப் பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போன் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஒற்றை ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷ்ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. கூல்பேட் மெகா 4ஏ ஸ்மார்ட்போனில் 2000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது.
கூல்பேட் ஏ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1280 x 720 பிக்சல் திர்மானம் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். கூல்பேட் ஏ1 ஸ்மார்ட்போன் பொதுவாக குவாட்-கோர் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…