விலை குறைந்த வயர்லெஸ் இயர்பட்களுக்கு போட்டி.. அறிமுகமாகவிருக்கும் ‘ஆப்பிள் இயர்போட்ஸ் லைட்’..!
மலிவான வயர்லெஸ் இயர்பட்களுடன் போட்டியிடும் வகையில் ஆப்பிள் தனது ‘ஏர்போட்ஸ் லைட்’ -ஐ அறிமுகப்படுத்த உள்ளது.
ஆப்பிள் நிறுவன தொழிநுட்பங்கள் என்றாலே பயனர்களிடையே பிரபலமான ஒன்றாகும். விலையிலும் ஆப்பிள் தொழில் நுட்பங்கள் உயரத்திலே உள்ளது. இதனை தொடர்ந்து மலிவு விலை தொழில்நுட்பங்களிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரவுள்ளது. இதன் தொடக்கமாக ஆப்பிள் குறைந்த விலை வயர்லெஸ் இயர்பட்களுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
ஆப்பிள் தனது ஏர்போட்களில் குறைந்த விலையிலான ‘ஏர்போட்ஸ் லைட்’ ஐ அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏர்போட்ஸ் லைட் மாடல்களின் விலை $100க்கு (ரூ.8,282) கீழ் இருக்கும் எனவும் இந்தியாவில் இதன் விலை ரூ.10,000-க்குள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
இந்த ஏர்போட்ஸ் லைட் மூலம், ஏர்போட்களின் ஏற்றுமதி 2022-ல் 73 மில்லியன் யூனிட்டுகளில் இருந்து 2023-ல் 63 மில்லியனாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்போட்ஸ் லைட்டைப் பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் அதிகம் அறியப்படவில்லை.