கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடக்கும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ கூறி இருந்தார்.
அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன.
இரண்டாவது தலைமுறை ஐபோன் எஸ்இ-யின் முக்கிய சந்தையானது இந்தியா என்றே கூறப்படுகிறது. ஆக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அறிமுகமான அதே ஜூன் மாதத்தில், இந்திய விற்பனையை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகம். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன.
சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…