விரைவில் வெளியாகயிருக்கும் ஐபோன் எஸ்இ 2(iphone se2)..!

Default Image

 

கடந்த பிப்ரவரி மாதத்தில், சீனாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வருகிற ஜூன் 4 முதல் ஜூன் 8 வரை நடக்கும் WWDC 2018 நிகழ்வில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங்-சி குயோ கூறி இருந்தார்.

ஆப்பிள் அதன் புதிய ஐபோன் எஸ்ஐ 2-வை இந்த ஆண்டு வெளியிடாது. மறுகையில் வெளியான பெரும்பாலான தகவல்கள் கூறப்படும் எஸ்இ 2 ஆனது, செப்டம்பர் 2018-க்குள் வெளியாகும் என்று பரிந்துரைத்துள்ளன.

அதில் வரவிருக்கும் சில ஆப்பிள் ஐபோன்களின் மாடல் எண்கள் ஆனது, ரஷ்ய EEC போர்ட்டில் காணப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஐபோன் மாடல்களின் மாதிரி எண்கள் வெளிப்பட்டுள்ளன. அவைகள் A1920, A1921, A1984, A2097, A2098, A2099, A2101, A2103, A2104, மற்றும் A2106 ஆகியவைகள் ஆகும். உடனே மொத்தம் 11 ஐபோன்கள் வெளியாகும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த சமீபத்திய ஆதாரம், WWDC 2018 நிகழ்வில் நிச்சயமாக ஒரு ஐபோன் அறிமுகப்படுத்தப்படக்கூடும் என்பதை உறுதி செய்துள்ளன.

ஐபோன் எஸ்இ 2 ஆனது இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக சந்தையில் உள்ள இதர ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் விலையில் அறிமுகமாலாம். அதாவது ரூ.20,000/-க்கும் குறைவான ஒரு விலைப்புள்ளியில் ஆன்லைன் வழியாக வாங்க கிடைக்கலாம். ஆக மொத்தம், ஐபோன் எஸ்இ 2-வின் 32 ஜிபி மாடல் ஆனது ரூ.25,000/-க்கும் குறைவாகவும், 128 ஜிபி மாடல் ஆனது ரூ.30,000/- என்கிற புள்ளியிலும் தான் இந்திய சந்தையை எட்டும்.

இரண்டாவது தலைமுறை ஐபோன் எஸ்இ-யின் முக்கிய சந்தையானது இந்தியா என்றே கூறப்படுகிறது. ஆக, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ 2 அறிமுகமான அதே ஜூன் மாதத்தில், இந்திய விற்பனையை சந்திக்கும் என எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, ஐபோன் எஸ்2 ஆனது 4.2 இன்ச் டிஸ்ப்ளே கொண்டு வெளியாகும். அதாவது ஐபோன் எஸ்இ-ஐ விட 0.2 அங்குலம் அதிகம். மேலும் ஐபோன் எஸ்இ 2 ஆனது அதன் முன்னோடிகளின் வடிவமைப்பில் இருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் எஸ்இ 2 ஆனது ஐபோன் எக்ஸ் போன்ற, பெஸல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பேஸ் ஐடி ஆதரவைக் கொண்டதாக இருக்கும். ஆனால் சீனாவில் இருந்து வெளியான சமீபத்திய அறிக்கைகளானது, இந்த ஐபோன் மாடல் ஆனது அதன் முன்பக்கத்தில் டச் ஐடி ஹவுஸ் பட்டனை தக்கவைத்துக் கொள்வதாக கூறியுள்ளன.

சமீபத்திய ஐபோன்களைப் போலவே, ஐபோன் எஸ்இ 2 ஆனதும், பின்புற கண்ணாடி வடிவமைப்பு உடனான வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்