இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ்அப் – ஐ உளவு பார்க்கும் சீன ஹேக்கர்கள்..!

Published by
Dinasuvadu desk

இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ்-அப்பில் நுழைந்து, பாதுகாப்பு தகவல்களை திருடும் செயலில் சீன ஹேக்கர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக ஏடிஜிபிஐ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய ராணுவ வீரர்கள் குழு ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாட்ஸ்-அப் பயன்பாட்டில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை இங்கே காணலாம்.

சீன எண்கள் +86ல் தொடங்கும். இந்த எண்கள் இந்திய ராணுவத்தினரின் வாட்ஸ்-அப் குழுக்களில் நுழைந்து தகவல்களை திருடுகின்றன. எனவே +86 எனத் தொடங்கும் மொபைல் எண்களில் எச்சரிக்கை தேவை.

வாட்ஸ்-அப் குழு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஆராய வேண்டும். ஏதாவது புதிய எண்கள் குழுவில் சேர்க்கப்பட்டால், இதுகுறித்து தகவல்களை அறிந்து கொள்ள வேண்டம்.

வாட்ஸ்-அப் குழுவில் உள்ள எண்களை, பெயர்கள் கொண்டு உங்கள் மொபைலில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் புதிய எண்கள் குறித்து, விவரம் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறியப்படாத மொபைல் எண்களை தொடந்து கண்காணிக்க வேண்டும். வாட்ஸ்-அப் குழு ரீதியிலும், தனிப்பட்ட ரீதியிலும் தொடர வேண்டும

நீங்கள் மொபைல் எண்ணை மாற்றினால், உடனே குழு அட்மினுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வாட்ஸ்-அப் மொபைல் எண்ணை மாற்றினால், உடனே பழைய எண்ணின் வாட்ஸ்-அப்பை நீக்கி விட வேண்டும். மேலும் பழைய சிம் கார்டை முற்றிலும் அழித்துவிட வேண்டும்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

23 mins ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

50 mins ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

1 hour ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

1 hour ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

2 hours ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

2 hours ago