ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவதுபோல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் சீன போலீஸ்!
போலீசார் சீனாவில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை பயன்படுத்தி வருகின்றனர்.
ஸெங்சவ் (Zengzhou) ரயில் நிலையத்தில் நான்கு உயர் போலீஸ் அதிகாரிகள் இந்தக் கண்ணாடியை அணிந்தபடி, குற்றவாளிகளைப் பிடித்து வருவதாக சீனாவின் பிப்பிள்ஸ் டெய்லி பத்திரிகை தெரிவிக்கிறது.இந்தக் கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய நபர்களைப் படம் பிடித்து, அதைக் கண்ணாடியுடன் பொருத்தப்பட்டுள்ள செல்போன் போன்ற உபகரணத்திற்கு அனுப்புகிறது.
அந்த உபகரணத்தில் ஏற்கனவே போலீஸ் சேகரித்து வைத்துள்ள தரவுகளை வைத்து அவரது முகவரி என்ன? தற்போது அவர் தங்கி இருக்கும் இடம், சமீபத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல், பயன்படுத்திய இன்டர் நெட் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இதுவரையில் சந்தேகத்திற்குரிய ஏழு பேரையும், தவறான அடையாள அட்டை உபயோகப்படுத்திய 26 பேரையும் இந்தக் கண்ணாடியின் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்தக் கண்ணாடி தனிமனிதர்களின் அந்தரங்க உரிமையைப் பாதிக்கிறது என மனித உரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.