சீனாவின் இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை !
சீனா புதிதாக ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
HQ 9 என்ற ஏவுகணை தடுப்பு அமைப்பை சீனா மேம்படுத்தி வருகின்றது. இதன்படி ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள கோர்லா சோதனைத் தளத்தில் இருந்து இடைமறித்து தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், தரைப்பரப்பில் இருந்து விண்ணுக்குச் சென்று பின்னர் மீண்டும் வளிமண்டலப் பகுதிக்குள் நுழைந்து இலக்கை தாக்கும். ஆனால் தற்போது சீனா சோதித்து பார்த்துள்ள ஏவுகணை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை, வளிமண்டலப் பகுதிக்குள் நுழையும் முன்னரே தாக்கி அழித்து விடும் வல்லமை கொண்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக மட்டுமே ஏவுகணை சோதனை நடத்தியதாக சீனா விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.