Chatbot-ஐ Gemini என பெயர் மாற்றம் செய்தது கூகுள் நிறுவனம்!

google gemini AI

இந்த நவீன உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வேகமாக அதிகரித்து வருகிறது என்ற கூறலாம். இதில் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) தற்போது வளம் வந்துகொண்டிருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்போன்கள் முதல் அனைத்திலும் இந்த தொழில்நுட்பம் காணப்படுகிறது. சாட்ஜிபிடியை தொடர்ந்து பல்வேறு ஏஐ தொழில்நுட்பம் அறிமுகமாகும் நிலையில், அதை பயன்படுத்துவோரின் எண்ணிகை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கூகுள் நிறுவனம், தங்களது Bard என்ற செயற்கை நுண்ணறிவு Chatbot-ஐ, Gemini என பெயர் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகுள் அசிஸ்டண்ட்டை பயன்படுத்துவதை போலவே ஜெமினியை அசிஸ்டென்ட்டாக தேர்வு செய்து பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஓபன் ஏஐ-யுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறவனம் சாட் ஜிபிடியை (ChatGPT) அறிமுகப்படுத்தியது.

PhonePe மற்றும் GPayக்கு பதில் உள்நாட்டு செயலிகளை ஆதரிக்க வேண்டும்: இந்திய அரசுக்கு பரிந்துரை

இதையடுத்து, 2023 ஆம் ஆண்டு ChatGPT-க்கு போட்டியாக கூகுள் நிறுவனம் தனது பார்ட் சாட் பாட்டை (BardAI Chatbot) அறிமுகம் செய்தது. ஆனால், ஒரு சில தொழில்நுட்ப பிரச்சினை காரணங்களால் கூகுள் எதிர்பார்த்த அளவுக்கு Chatbot அமையவில்லை. பின்னர், அதனை மேம்படுத்தி சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், BardAI Chatbot-யின் பெயரை Gemini என மாற்றம் செய்வதாக கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார்.

ஆண்ட்ராய்டு சாதன பயனர்கள் தங்கள் சாதனங்களில் எப்படி google assistant-ஐ பயன்படுத்துகிறார்களோ, அதேபோல Gemini-ஐ அசிஸ்டன்டாக தேர்வு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூகுள் ஜெமினி,  மல்டிமாடல் இன்டராக்சனை கொண்டுள்ளது. இதன் மூலம் திட்டமிடல், புது கருத்து உருவாக்கம், படங்களை உருவாக்குதல், மொழிபெயர்த்தல் மற்றும் இசையமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வழங்குகிறது.

வாய்ஸில் okay google என்று கூறினால் Gemini AI அசிஸ்டன்ட்டை கொண்டு வர முடியும். இதன் மூலமாக ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் சாதனத்தில் என்னென்ன செய்கிறார்கள் என்பதை ஜெமினி கண்காணிக்கும். அவற்றில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக ஜெமினியை அணுகலாம் என்றுள்ளனர். 1,950/மாதம் பிரீமியம் சந்தா திட்டத்தின் மூலம் இதனை அணுகலாம். gemini.google.com இல் இலவச பதிப்பும் கிடைக்கிறது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi