தொழில்நுட்பம்

இனிமே மனிதனை போல சாட் ஜிபிடியால் பேச முடியும்! ஓபன் ஏஐ வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Published by
செந்தில்குமார்
செயற்கை நுண்ணறிவால் செயல்படும் சாட்போட்டுகள் பல இருந்தாலும் ஓபன் ஏஐ நிறுவனத்தால், கடந்த 2022ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சாட் ஜிபிடி எனும் சாட்போட்டை தொழில் மற்றும் கல்வி என பல நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இது நாம் கேட்கும் கேள்விகளுக்கு, 2021ம் ஆண்டிற்கு முன்பு உள்ள தகவலின் அடிப்படையில் இணையத்தில் ஆராய்ந்து பதில் தரக்கூடியது.

சாட் ஜிபிடி ஆனது கவிதைகள் முதல் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்கள் வரை எழுதித் தரக்கூடிய திறன் கொண்டது. அந்தவகையில் தற்போது எழுத்து வடிவில் நாம் கேள்விக்கு மட்டுமே இந்த சாட் ஜிபிடி பதில் அளிக்கிறது. இதனை மேம்படுத்த ஓபன் ஏஐ நிறுவனம் தொழில் துறையை புரட்டி போடக்கூடிய வகையில் சாட் ஜிபிடி-ல் புதிய அம்சத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய அம்சம் மூலம் புகைப்படம் வாயிலாகவோ அல்லது குரல் மூலமாகவோ உரையாடல்களை நடத்தி, நம்முடைய கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். இது மனிதனை போன்ற குரலில் பேசக்கூடிய, ஓபன் ஏஐ நிறுவனத்தின் புதிய டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் (TTS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரையாடும் திறன் கொண்டதாக இருக்கும்.

புதிய டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் மாடலால் இயக்கப்படும் இந்த அம்சத்தில் ஜூனிபர், ஸ்கை, கோவ், எம்பர் மற்றும் ப்ரீஸ் ஆகிய ஐந்து வெவ்வேறு குரல்களைத் தேர்வுசெய்து பயனர்கள் உரையாடல் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக கூகுள், சேட் ஜிபிடிக்குப் போட்டியாக பார்ட் என்ற சேட்போட்டை இந்தியா உட்பட 180 நாடுகளில் அறிமுகப்படுத்தியது.

எனவே, இந்த குரல் அம்சம் கூகுளின் வாய்ஸ் அசிஸ்டென்ட், ஆப்பிளின் சிரி மற்றும் அமேசானின் அலெக்சா போன்ற குரல் மூலம் இயங்கக்கூடிய தொழிநுட்பத்திற்கு போட்டியாக இருக்கலாம். இந்த அம்சத்தோடு புகைப்படம் வாயிலாகவும் நீங்கள் கேள்வி கேட்டு சாட் ஜிபிடியுடன் உரையாடலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என்பதைத் தெரிந்து கொள்ள பிரிட்ஜில் இருக்கும் பொருட்களைப் படம் எடுக்கவும்.

பிறகு, இந்த பொருட்களை வைத்து இரவு உணவிற்கு என்ன செய்யலாம் என்று கேட்கும்போது, சாட் ஜிபிடி அதற்கான பதிலை அளிக்கும். இந்த அம்சங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் சாட் ஜிபிடி பிளஸ் மற்றும் எண்டர்பிரைஸ் பயனர்களுக்கு கிடைக்கும். இந்தியாவில் ஒரு மாதத்திற்கு சாட் ஜிபிடி சப்ஸ்கிரிப்சனுக்கு ரூ.1,950 செலுத்த வேண்டும். மேலும், ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டில் குரல் உரையாடல் அம்சம் மட்டுமே இருக்கும். படத்தை அடையாளம் காணும் அம்சம் அனைத்திலும் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது

Published by
செந்தில்குமார்

Recent Posts

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? அப்பாவு கொடுத்த அப்டேட்!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…

4 minutes ago

முதல் நாளிலேயே தொடர் அமளி! இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…

6 minutes ago

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2'  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…

14 minutes ago

“ராமதாஸுக்கு வேற வேலை இல்லை., பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!” மு.க.ஸ்டாலின் காட்டம்!

சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…

22 minutes ago

AUS vs IND : விக்கெட்டை சொல்லி எடுக்கும் இந்திய அணி! சொந்த மண்ணில் தடுமாறும் ஆஸி.!

பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…

1 hour ago

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…

1 hour ago