Channel Reply: வாட்ஸ்அப் சேனலில் புதிய அம்சம்.! அப்படி என்ன இருக்கிறது.?

Channel update reply

மெட்டாவிற்குச் சொந்தமான வாட்ஸ்அப் ஆனது சமீபத்தில் ஒரு அசத்தலான வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஒளிபரப்பு அம்சம், இந்தியா உட்பட 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சேனல்கள் உங்களது சேட் பக்கத்தில் இருந்து தனியே பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டேட்டஸ் பக்கமானது தற்போது அப்டேட்ஸ் என மாற்றப்பட்டு, இதனுள் ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்கள் வைக்கப்பட்டுள்ளது. முதலில் பீட்டா பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சம், தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கிறது. இந்நிலையில்,இந்த மாசத்தில் கூடுதலாக ஒரு புதுப்பிப்பை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது.

அது என்னவென்றால், நீங்கள் சேனல்களில் பதிவிடும் ஒரு போஸ்ட்டிற்கு, பயனர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் கேள்விகளை கேட்பதற்காக, ‘ரிப்ளை’ என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 2.23.20.6 என்ற வெர்சனில் பீட்டா அப்டேட் மூலம் விரைவில் சோதனைக்காக அறிமுகமாகவுள்ளது.

இந்த கூடுதல் அம்சம் வாட்ஸ்அப் சேனல்களை இன்னும் சுவாரஸ்யமாகவும் பயனாளர்களுக்கு பயனுள்ளதாகவும் மாற்றும். மேலும் பயனர்கள் விரும்பும் தலைப்புகளில் தொடர்ந்து தகவல்களை பெறவும், உரையாடல்களில் ஈடுபடவும் உதவும். இதில் முக்கியமாக நீங்கள் போஸ்டுகளுக்கு பதிலளிக்கும் போதும் உங்கள் தொலைபேசி எண் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ரிப்ளை அம்சம் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராமில் இல்லை. வாட்ஸ்அப் சேனல்களில் நீங்கள் பகிரும் செய்திகள் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே இருக்கும். அதன்பிறகு அழிக்கப்படும். பயனர்களிடமிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் சேனல்களில் மேலும் பல அம்சங்களைச் சேர்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் பிசினஸுக்கான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிசினஸுக்காக மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் ஃப்ளோஸ், ரேஸர்பே மற்றும் பேயுவுடன் இணைந்த வேகமான கட்டண முறை மற்றும் வணிகர்களுக்கான மெட்டா வெரிஃபைட் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்