ஜூலை 1 முதல் சிம் கார்டு விதிகள் மாற்றம்… TRAI கொடுத்த முக்கிய அறிவிப்பு!
SIM Card Rules: இந்தியாவில் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு புதிய விதியை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகள் ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் மற்றும் ஹேக்கிங் செய்பவர்களை தடுக்கும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
Read More – புதிய Snapdragon சிப்செட்டை அறிமுகம் செய்தது Qualcomm!
SIM Card விதி:
TRAI-யின் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி (MNP) விதியின்படி, சமீபத்தில் தங்கள் சிம் கார்டை மாற்றிய அல்லது வாங்கிய பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை இனி போர்ட் செய்ய முடியாது. அதாவது, ஒருமுறை சிம் கார்டுகளை போர்ட் செய்த பயனர்கள், இனி அவர்களின் மொபைல் எண்ணை மீண்டும் ஒருமுறையோ அல்லது பலமுறையோ போர்ட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More – இதுவரை இல்லாத மிகப்பெரிய டிஸ்ப்ளே… கூகுள் பிக்சல் ஃபோல்ட் 2 குறித்த சுவாரஸ்யங்கள்..
இனி ஒரு முறை மட்டுமே:
சிம் எக்ஸ்சேஞ் மற்றும் சிம் ஸ்வாப்பிங் என்ற அழைக்கப்படும் சிம் தொடர்பான நடைமுறையை இனி ஒரு நபர் ஒரு முறை மட்டுமே செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சிம் பரிமாற்றம் என்பது சிம் ஸ்வாப்பிங் எனப்படும். சிம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது உடைந்தால் சிம் இடமாற்றம் செய்யப்படுகிறது.
Read More – அதிமுக – பாஜக கூட்டணி முறிவு… முதல் முறையாக விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு!
ஆனால், தற்போது சிம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது உடைந்தாலோ அருகில் இருக்கும் டெலிகாம் சேவை மையத்தை அணுகி பயனர்கள் புதிய சிம் கார்டு முறை இனி இது நடக்காது.
மோசடி:
நாட்டில் சிம் தொடர்பான மோசடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு சிம் ஸ்வாப்பிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், மொபைல் பயனர்கள் மொபைல் இணைப்பை மாற்றிய உடனேயே போர்ட் செய்வதையை தடுக்கும் வகையில் இந்த புதிய விதி அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஒரு முறைக்கு மேல் சிம் கார்டுகளை மாற்ற முடியாது. விதிகளை மாற்றுவதன் மூலம் மோசடி சம்பவங்களை தடுக்க முடியும் என்று TRAI கூறியுள்ளது.