சந்திரயான் 2 நிலவுப்பயண திட்டம் குறித்து, இஸ்ரோ தலைவரின் கருத்து..!
சந்திரயான் 2 நிலவுப்பயண திட்டம் குறித்து, இஸ்ரோ தலைவர் கே. சிவன், விண்வெளி ஆராய்ச்சி துறைக்கான மத்திய அரசின் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங்கிடம் விளக்கினார்.
சந்திரயான் 2 விண்கலம் இந்த மாதம் நிலவுக்கு செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது விண்கலத்தில் மேலும் சில சோதனைகளை நடத்தப்படுவதால், விண்ணில் ஏவுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், இதன் காரணமாக சந்திரயான் 2 விண்கலத்தை ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நிலவின் தென் துருவத்தில், பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த பாறைகள் இருக்கிறது என்றும், அதை ஆராய்ச்சி செய்வதால், உலகம் எப்போது தோன்றியது என்பது குறித்த விபரங்கள் தெரிவதற்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார்.
சந்திரயான் 2 திட்டமானது, 800 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.