மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

Published by
அகில் R

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம் தெளிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது.இந்த கோடை காலத்தில் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். அது ஒன்றும் பெரிய விளைவை பயன்படுத்திடும் ஏசிக்கும், நமக்கும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், அதே சமயம் மழை பெய்யும் போது ஏசியை பயன்படுத்தலாமா என்ற குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கும், அதை பற்றிய தெளிவான விளக்கத்தை நாம் பார்க்கலாம்.

தமிழகத்தில் தற்போது கோடை கால மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் ஆங்காங்கே நிலவி வருகிறது. இந்த மழை நேரத்தில் ஏசி உபயோகப்படுத்தலாமா என்று கேட்டால் லேசான மழை பொழிவு இருக்கும் பட்சத்தில் ஏசியை உபயோகப்படுத்தினால் அதனால் ஒன்றும் ஆபத்து இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த லேசான மழையால், நாம் ஏசிக்காக வெளிப்புறத்தில் வைத்திருக்கும் ஏசி யூனிட்டில் (AC Unit) படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகள் இதனால் சுத்தம் செய்யப்படுகிறது.

மேலும், அதி கனமழை, புயல் போன்றவற்றலிருந்து வெளிப்புறத்தில் வைத்திருக்கும் இந்த ஏசி யூனிட்டுகள் சேதம் அடையாமல் நாம் பார்த்து கொள்ள வேண்டும். என்னதான் அந்த ஏசி யூனிட்டுகள் சேதமடையாத அளவிற்க்கு தயாரிக்கபட்டிருந்தாலும் இது போன்ற அதிக கனமழை பெய்வதனால் சிறுது சேதமடையதான் செய்யும் எனவும் ஏசி டெக்னீஷியன்கள் தெரிவிக்கின்றனர்.

முடிந்த அளவுக்கு ஏசி யூனிட்டுகள் மழையால் சேதமடையாத அளவிற்கு வீட்டிற்கு வெளியில் வைக்க வேண்டும் இல்லை என்றால் மழை பெய்யும் நேரத்தில் ஏசியை அனைத்து விடுவது மிகவும் நல்லது. மழை பெய்யும் போது ஏசியை இயக்குவது வேறு சில விளைவுகளையும் ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் அது என்னவென்றால் இது போன்ற மழை நேரத்தில் நாம் ஏசி உபயோகிப்பதால் வழக்கத்தை விட வேகமாக அது வெப்பம் அடையலாம்.

அதற்கு காரணம் மழையால் உங்கள் ஏசியினுள் இருக்கும் சுருள்கள் ஈரமாகிவிடுவதால் தான். அதை மீறி சுழன்று இயங்க வேண்டி இருக்கும் என்பதால் இது போன்ற சூழ்நிலையில் ஏசி மூலம் மழை நீர் வீட்டிற்குள் வரவும் வாய்ப்பு உள்ளது. அதே நேரம் புயலின் போதும்  ஏசியை இயக்கக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இடி அல்லது மின்னல் போன்றவைகள் உங்கள் வீட்டைத் தாக்கினால், அது மின்சாரக் கம்பிகள் வழியாகச் சென்று உங்கள் ஏசி யூனிட்டை சேதப்படுத்தும்.

இதனால் வீட்டிற்குள் மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். இது எல்லவத்திற்கும் மேலாக மின்சாரத்தின் கட்டணம் எகுறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் மழை நேரங்களில் ஏசியை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது என ஏசியை பற்றி ஆராயும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Published by
அகில் R

Recent Posts

நடிகை கஸ்தூரி கைது? சர்ச்சைப் பேச்சுக்கு 4 பிரிவுகளின் கீழ் ழக்குப் பதிவு.!

சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…

8 hours ago

“2026ல் நம்மை எதிர்த்து யார் வந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி” – உதயநிதி ஸ்டாலின் சூளுரை.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…

9 hours ago

தெலுங்கு மக்களிடம் மன்னிப்புக் கோரினார் நடிகை கஸ்தூரி!

சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…

10 hours ago

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

10 hours ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

11 hours ago