பிஎஸ்என்எல்-ன் அதிரடி பிளான்..! கடும் நெருக்கடியில் மற்ற நிறுவனங்கள்..!

Default Image

 

இந்தியாவின் தொலைதொடர்பு சந்தையில் தனி இடத்தை பிடித்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் தரும் வரம்பற்ற டேட்டா திட்டங்களுடன் இலவச கால் அழைப்புகள் போன்ற சேவையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது,அதன்படி 157ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த திட்டம் வடக்கு கிழக்கு ஜம்மு& காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களில் செல்லுபடியாகாதது என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் பிஎஸ்என்எல் அறிவித்துள்ள மெகா ரூ.949 பிளானில் 157ஜிபி டேட்டா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த திட்டம் பல்வேறு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்க பயன்படும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.949 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் மற்றும் இலவச கால் அழைப்புகளை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 157நாட்கள் மட்டும் இந்த திட்டம் செல்லுபடியாகும் என பிஎஸ்என்எல் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.187/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா வீதம் 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.485/-திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 91நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மேலும் இந்த திட்டத்தில் இலவச கால் அழைப்புகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.666/-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வீதம் 129நாட்கள் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால் அழைப்புகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் பெற முடியும் என்று பிஎஸ்என்எல் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்