பலவித இணைய சேவைகள் இன்றளவில் இருந்தாலும் சிறப்பான சேவையை தருவோரை தான் மக்கள் பெரிதும் நாடுகின்றனர். ஒரு சில இணைய சேவைகள் சிறப்பான முறையில் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால்,சில சேவைகள் அந்த அளவிற்கு தரமான சேவைகளை நமக்கு தருவதில்லை. அதே போன்று நகரத்தில் இருக்க கூடிய மக்களுக்கு மட்டும் சேவையை வழங்குவதும் சரியல்ல.
கிராம மக்களுக்கும் சென்றடையும் வகையில் இந்த சேவையை வழங்கினால் அதுவே மிக சிறப்பான நிறுவனமாகும். இப்படிப்பட்ட வகையில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது பிஎஸ்என்எல் சேவை. மக்களுக்காக பல வகையில் சிறப்பான சேவைகளை கொடுத்து வரும் பிஎஸ்என்எல், தற்போது மேலும் ஒரு அற்புதமான சேவையை வழங்க உள்ளது. அது என்ன என்பதை இனி அறிந்து கொள்வோம்.
4ஜி
இதுவரை பிஎஸ்என்எல் 3ஜி வரையிலான சேவையை மட்டுமே வழங்கி வந்தது. ஆனால் முதல் முறையாக தற்போது 4ஜி சேவையை தொடங்கி உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.
வேலூர்
தற்போது பிஎஸ்என்எல், தனது 4ஜி சேவையை வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் வழங்க உள்ளது. இதனால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் நேர்த்தியான முறையில் 4ஜி சேவையை பயன்டுத்த இயலும் என இதன் பொது மேலாளர் கூறியுள்ளார். மேலும், பிஎஸ்என்எல் தொலை தொடர்பு வசதி இல்லாத வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கிராமங்களுக்கும் இதன் சேவை இனி வழங்கப்படும் என கூறியுள்ளார்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று…
சென்னை : தமிழகத்தில், தென் மாவட்டங்களில் கனமழையின் காரணத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் விடுமுறை அறிவித்துள்ளனர். மேலும், திருநெல்வேலி,…
தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில்,…
திருநெல்வேலி : தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடமும் மற்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கடந்த சில…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…