சமீப காலமாக எல்லா வகையான நெட்வெர்க்குகளும் பல்வேறு ஆஃபர்களை வாரி வழங்கி வருகின்றன. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் தற்போது ஜியோ, பி.எஸ்.என்.எல், வோடபோன் போன்றவற்றை கூறலாம்.
பலவித ஆஃபர்கள் இருந்தாலும் மக்களுக்கு அதிகம் பயன்பாடாக உள்ள ஆஃபரை தான் தேர்ந்தெடுப்பார்கள். இப்படிப்பட்ட ஆஃபரை தான் தற்போது BSNL வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
என்ன ஆஃபர்?
கடந்த சில வாரங்களாக ஆஃபர் மழையை BSNL வழங்கி வருகிறது. குறிப்பாக 4ஜி சேவை, அதிக டேட்டா போன்றவற்றை தந்து வருவதை BSNL-யின் வாடிக்கையாளர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் “சிக்ஸர் 666” என்கிற புதுவித ஆஃபரையும் BSNL தரவுள்ளது.
சிறப்புகள்
இந்த ஆஃபரில் 1.5 ஜிபி என்ற அளவிலான டேட்டாவை 3 ஜிபி அளவாக உயர்த்த BSNL நிறுவனம் கூறியுள்ளது. இந்த அப்டேட் செய்யப்பட்ட திட்டத்தை தான் ‘சிக்ஸர் 666’ என பெயர் சூட்டியுள்ளனர். அதாவது இதன் பிளான் ரூபாய் 666 என்பதாலே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
எப்போது?
வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பின்னர் இந்த பிளான் நடைமுறைக்கு வர உள்ளதாக BSNL அறிவித்துள்ளது. மேலும், இந்த “சிக்ஸர் 666” என்கிற புது பிளானின் இணைய வேகமும் அதிகமாக உள்ளதாம். 40Kbps என்கிற அளவு இதன் இணைய வேகம் இருக்கும் என வெளியிட்டுள்ளனர். எனவே, இனி BSNL வாடிக்கையாளர்களுக்கு கோடை கொண்டாட்டம் தான்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…