பணமோசடிக்கு செக் வைத்த பிஎஸ்என்எல்! ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த புதிய அம்சம்!
BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி செய்யும் வகையில் கால் வந்தது என்றால் புகார் கொடுக்க புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.

சென்னை : தெரியாத சில நம்பர்களிலிருந்து அடிக்கடி போன் வந்து அதன் மூலம் மர்ம நபர்கள் பண மோசடி, செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நாம் கேள்விபட்டிக்கொண்டு இருக்கிறோம். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், பணமோசடி செய்யும் வகையில், வரும் நம்பர்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதியைக் பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டு வந்து இருக்கிறது. அதாவது, இனிமேல் BSNL நம்பர்கள் வைத்திருப்பவர்களுக்குத் தெரியாத நம்பர்களிலிருந்து பண மோசடி செய்யும் வகையில் கால் வந்தது என்றால் நீங்கள் BSNL அதிகாரப்பூர்வ செயலியின் மூலம் புகார் அளிக்கலாம்.
எப்படி புகார் செய்வது ?
- முதலில், நீங்கள் புகார் செய்யவேண்டும் என்றால் அதிகாரப்பூர்வமான செயலியான BSNL Selfcare செயலிக்குள் செல்லவேண்டும்.
- பிறகு முகப்பு பக்கத்தில் இருக்கும் 3 டாட்டை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘Preference Complaint ‘ என்பதை க்ளிக் செய்யுங்கள்.
- பிறகு புதிய புகார் என்பதனை கிளிக் செய்யுங்கள்.
- பின் குரல் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாக உங்களுடைய புகாரை பதிவு செய்து கொள்ளலாம்.
ஏர்டெல், ஜியோவை ஓவர்டேக் செய்த BSNL
இப்படியான அசத்தல் அம்சத்தை இதற்கு முன்னதாக முன்னணி நிறுவனங்களாக இருக்கும் ஏர்டெல் மற்றும் ஜியோ கூட கொண்டுவரவில்லை. அவர்களை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு அசத்தலான அம்சத்தை தற்போது BSNL கொண்டு வந்துள்ளது. ரீஜார்ஜில் பல அம்சங்களை கொண்டு வந்து பயனர்களை ஈர்க்கும் BSNL இந்த முறை பலருக்கும் உபோயோகம் ஆகும் வகையில் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளதால் , bsnl பயனர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.