ஏப்ரல் முதல் டெல்லியில் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் மட்டுமே எரிபொருள் நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் BS6 தர பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது, ஆனால் டெல்லியில் பெருகி வரும் காற்று மாசுபாடு மற்றும் வாகன நெருக்கடி எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே BS6 தர எரிபொருளை மட்டுமே விற்பனை செய்ய முடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் பெருகி வரும் காற்று மாசு காரணமாக ஏற்கனவே பத்து வருடங்களுக்கு மேலான பழைய கார்களுக்கு தடையும் மேலும் ஆட் ஈவன் முறையும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
BS6 தர எரிபொருள் வெளியிடப்பட்டாலும் BS6 தர கார்கள் இந்தியாவில் அதிகம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சில விலையுயர்ந்த கார் மாடல்கள் மட்டுமே BS6 தர எஞ்சினில் கிடைக்கிறது. BS6 தர எரிபொருளில் சல்பர் அளவு மிக குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா முழுவதும் BS6 தர மாசுக்கட்டுப்பாடு ஏப்ரல் 1, 2020 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்தியா முழுவதும் வாகனங்கள் மற்றும் எரிபொருள் என அனைத்துமே BS6 தரத்தில் மட்டுமே கிடைக்கும். தற்போது BS6 தர எரிபொருள் டெல்லியில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…