பிரமோஸ் ஏவுகணை இணைக்கும் பணிகள் தொடங்கியது!
பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரமோஸ் ஏவுகணைகளை பொருத்துவதற்காக சுகோய் போர் விமானங்களின் கட்டமைப்புகளில் சிறிது மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள், 2020ஆம் ஆண்டு நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.