புளூடூத் இயர்பட்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் போன்ற ஆடியோ சாதனைகளுக்கு தனித்துவம் வாய்ந்த நிறுவனமான போட் (BoAt), ஸ்மார்ட்வாட்ச்களையும் தயாரித்து சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. சமீபத்தில் புதிய போட் இம்மோர்ட்டல் கட்டானா பிளேடு டிடபிள்யூஎஸ் (BoAt Immortal Katana Blade TWS) என்ற கேமிங் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தியது.
இப்போது ஒரு ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ப்ளூடூத் காலிங், அமோலெட் டிஸ்பிளே, 100+ ஸ்போர்ட்ஸ் மோட் மற்றும் சுகாதார அம்சங்கள் கொண்ட போட் லூனார் டிகோன் (boAt Lunar Tigon) என்ற ஸ்மார்ட்வாட்ச் மலிவான விலையில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இப்போது இதன் விலை மற்றும் விவரக்குறிப்புக்களைப் பார்க்கலாம்.
போட் லூனார் டிகோன் ஆனது 466 x 466 பிக்சல்கள் ரெசல்யூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 1.45 இன்ச் (3.68 செ.மீ) ஆல்வேஸ் ஆன் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. இதில் கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள், ப்ளூடூத் காலிங் சப்போர்ட், குயிக் டைல் பேட் உள்ளது. அதோடு இந்த வாட்ச்சில் 10 காண்டாக்ட்ஸ் வரைப் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
காலிங் செய்ய ப்ளூடூத் 5.1 உள்ளது. இதில் இருக்கக்கூடிய 290mAh பேட்டரி 5 முதல் 7 நாள் வரை செயலில் இருக்கக்கூடியது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய 2 மணி நேரம் ஆகும். பிரிமியம் டிசைன் கொண்ட இந்த வாட்ச்சில் 100க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்கள், ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், டெய்லி ஆக்டிவிட்டி, மன்ஸ்ட்ரல் டிராக்கர், கைடட் பிரீதிங் போன்றவை உள்ளன.
நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்க ஐபி67 ரேட்டிங் உள்ளது. ஸ்மார்ட் வாய்ஸ் இன்டராக்ஷன் கேமரா மற்றும் இசைக் கட்டுப்பாடுகள், அலாரங்கள், டைமர், ஸ்டாப்வாட்ச், உலகக் கடிகாரம், வானிலை, விட்ஜெட் கட்டுப்பாடு மற்றும் பாஸ்வர்ட் போன்ற அம்சங்களும் லூனார் டிகோனில் உள்ளது.
ஓஷன் ரிட்ஜ், மெட்டாலிக் மிலனீஸ் ஆகிய இரண்டு ஸ்ட்ராப் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஓஷன் ரிட்ஜ் ஸ்ட்ராப் ஸ்மார்ட்வாட்ச் ரூ.2,899 என்கிற விலையிலும், மெட்டல் ஸ்ட்ராப் மாடல் ரூ 2,999 என்கிற விலையிலும் அதிகாரப்பூர்வ போட் இணையதளம் மற்றும் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…