ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளூஸ்கை..!

Default Image

ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி ட்விட்டருக்கு பதிலாக ப்ளூஸ்கை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

ப்ளூஸ்கை அறிமுகம் :

ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி ட்விட்டருக்கு பதிலாக ப்ளூஸ்கை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலியின் சோதனை செய்வதற்கான பீட்டா பதிப்பு, தற்பொழுது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 17 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலியை சுமார் 2,000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ப்ளூஸ்கை அம்சம் :

இந்த செயலியின் முகப்பு பக்கம் பயனர்கள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் உள்ளது. இடுகையிடும் பகுதியில் ட்விட்டரில் வாட் ஹப்பனிங்.? (What happening..?) என்று இருப்பது போல, ப்ளூஸ்கையில் வாட்ஸ் அப்.? (What’s up.?) என்று எழுதியிருக்கும். ட்விட்டரில் இடுகைகளை பதிவிடுவது போலவே இந்த செயலிலும் புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை பதிவிடலாம். ட்விட்டரில் உள்ளதைப் போலவே பிற நபர்களைத் தேடலாம் மற்றும் பின்தொடரலாம், அவர்களில் பதிவுகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.

அனைத்து நிறுவனத்திற்கும் போட்டி :

ஜாக் டோர்சி ட்விட்டரை எலான் மஸ்கிடம் ஒப்படைத்த பின்னர், 2019 இல் உருவாக்கப்பட்ட இந்த ப்ளூஸ்கை திட்டத்தை மேம்படுத்தினார். கடந்த ஆண்டு அக்டோபரில், டோர்சி “ப்ளூஸ்கை சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நபர்களின் தரவுகளை சொந்தமாக்க முயற்சிக்கும் எந்தவொரு நிறுவனத்திற்கும் ஒரு போட்டியாளராக இருக்க விரும்புகிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்