சாம்சங் எஸ்9 பிளஸ் உடன் போட்டிபோடும் பிளாக்பெரி அத்னா (blackberry athena)…!!

Published by
Dinasuvadu desk

பிளாக்பெரி அத்னா(blackberry athena) ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளத. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தொடுதிரை வசதி மற்றும் க்வெர்டி கீபேட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக்பெரி நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

தற்சமயம் பிளாக்பெரி சார்பாக வெளியிடப்பட்ட அத்னா ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் வழக்கமான க்வார்டி கீபேட் வடிவமைப்பு மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் மற்றம் 1080பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்னா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக இருக்கும். வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், சென்சார் போன்ற  இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவிரங்கள் வெளிவரவில்லை.

Recent Posts

கிறிஸ்துமஸ் மார்க்கெட்டுக்குள் தறிகெட்டு ஓடிய கார்! 2 பேர் பலி..60 பேர் காயம்!

ஜெர்மனி : கிருஸ்துமஸ் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஜெர்மனியின் மாக்டேபர்க் கிறிஸ்துமஸ் சந்தையில் மக்கள் பலரும் சந்தோசமாக தங்களுக்கு…

28 minutes ago

சதம் போச்சு..டென்ஷனாகி ஸ்டெம்பை மிதித்த க்ளாசென்! அபராதம் போட்ட ஐசிசி!

கேப் டவுன் : மிகவும் நல்ல ஆட்டக்காரர் ஆனால் கோபம் தான் கொஞ்சம் அடிக்கடி வரும் என்கிற வகையில், தென்னாப்பிரிக்கா அதிரடி…

51 minutes ago

தாக்கத்தை ஏற்படுத்திய விடுதலை 2! முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த…

1 hour ago

“துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் செய்வதை விடுங்கள்”..ஆளுநருக்கு அமைச்சர் கோவி.செழியன் பதில்!

சென்னை : துணை வேந்தர் நியமனம் தொடர்பான தேடல் விவகாரத்தில், மாணவர்களின் நலன் கருதி பல்கலைகழக மானிய குழு உறுப்பினரை…

2 hours ago

மின்சாரம் திருடிய சமாஜ்வாதி எம்பி! ரூ.1.91 கோடி அபராதம் விதித்த அதிகாரிகள்!

டெல்லி : சமாஜ்வாதி கட்சியின் எம்பி ஜியா உர் ரஹ்மான், மின்சார திருட்டு குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு உத்தரபிரதேச பவர்…

2 hours ago

வங்ககடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்! தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா?

சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.இந்த…

2 hours ago