தசரா என்பது அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான இந்து பண்டிகையாகும். இது ராமாயணத்தில் ராவணன் என்ற அரக்கனை ராமர் வென்றதைக் கொண்டாடும் விழாவாகும். இந்த தசரா பண்டிகை நாடு முழுவதும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த திருவிழா 10 முதல் 11 நாட்கள் வரை கொண்டாடப்படும்.
இந்த நாளில் பலரும் கோயில்கள் மற்றும் வீடுகளில் வழிபாடுகளை மேற்கொண்டு பல விழாக்களை நடத்துவார்கள். இந்த விழாவை இன்னும் சிறப்பாக மாற்றுவதற்கு ஈ-காமர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் தசரா விற்பனையை (Big Dussehra Sale) அறிவித்துள்ளது. பிக் பில்லியன் டேஸ் போலவே இந்த நிகழ்வு, ஃபிளிப்கார்ட்டின் முக்கிய நிகழ்வாகும்.
அதன்படி, இந்த தசரா விற்பனை அக்டோபர் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் 29ம் தேதி வரை நடைபெறும். இந்த 7 நாள் விற்பனையின் போது உடைகள், அழகு சாதன பொருட்கள், சமையல் பொருட்கள், டிவி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட பல தயாரிப்புகளுக்கு பிளிப்கார்ட் அதிக அளவிலான தள்ளுபடியை வழங்குகிறது.
இதே போல ஐபோன் முதல் சாம்சங், ரியல்மீ, போக்கோ, கூகுள் பிக்சல், ஒப்போ, விவோ என பல மொபைல் பிராண்டுகள் ஸ்மார்ட் ஃபோனில் எண்ணற்ற சலுகைகள் உள்ளன. இந்த தசரா விற்பனையின் போது ஐசிஐசிஐ பேங்கின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும். கோடக், எஸ்பிஐ, ஆர்பிஎல் வங்கி கார்டுகளுக்கும் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படும்.
OnePlus Open: சாம்சங் இசட் ஃபோல்ட்க்கு போட்டியா.? 5கேமரா, 16ஜிபி ரேம்..அறிமுகமானது ஒன்பிளஸ் ஓபன்.!
இதில் சிறப்பு சலுகையாக ரூ.19,999 மதிப்புள்ள ஸ்மார்ட்போனை ரூ.9,999 என்ற விளக்கே பெற்றுக் கொள்ளலாம். அது எவ்வாறெனில் நீங்கள் ரூ.19,999 க்கு ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால், அதன் விற்பனை விலையானது, ஃபிளிப்கார்ட் தசரா சேலில் ரூ.15,999 ஆக இருக்கும். மேலும், இதற்கு ரூ.1000 வங்கி தள்ளுபடி மற்றும் ரூ.5000 கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும்.
இதன்மூலம் ரூ.19,999 கொண்ட ஸ்மார்ட்போனை வெறும் ரூ.9,999க்கு வாங்கிக்கொள்ளல்லாம். இது மட்டுமின்றி, நீங்கள் வாங்க்கும் ஸ்மார்ட்போனிற்கு மாதம் ரூ.2,499 என்ற இஎம்ஐ வசதியும் உள்ளது. இந்த விற்பனையில் இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கிய கூகுள் பிக்சல் 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் தள்ளுபடி விலையை ஃபிளிப்கார்ட் பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, கூகுள் பிக்சல் 8 ரூ.75,999 என்ற ஆரம்ப விலையில் உள்ளது. இதற்கு ரூ.3,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.8,000 வரை வங்கி சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகளின் மூலம் கூகுள் பிக்சல் 8 இன் விலை ரூ.64,999 ஆக இருக்கும். இதேபோல, கூகுள் பிக்சல் 8 ப்ரோ ரூ.1,06,999 என்ற ஆரம்ப விலையில் உள்ளது.
இதற்கு ரூ.4,000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி மற்றும் ரூ.9,000 வரை வங்கி சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகளின் மூலம் கூகுள் பிக்சல் 8 ப்ரோவின் விலை ரூ.64,999 ஆக இருக்கும். மேலும், பேஷன் பொருட்கள் மீது 50% முதல் 90% வரை தள்ளுபடி உள்ளது. விளையாட்டு மற்றும் அழகு சாதன பொருட்கள் மீது 40% முதல் 80% வரை தள்ளுபடியும், வீடு மற்றும் சமையல் பொருட்கள் மீது 30% முதல் 80% தள்ளுபடியும், ஃபர்னிச்சர்கள் மீது 80% தள்ளுபடியும் உள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…