மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஆப்பிள், சாம்சங், விவோ, மோட்டோரோலா மற்றும் பல முன்னணி பிராண்டுகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களுக்கான சில தள்ளுபடி விலைகளை பிளிப்கார்ட் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில், ‘சேல் பிரைஸ் லைவ்’ என்ற அம்சத்தின் மூலம் கூகுள் பிக்சல் 7 மற்றும் கூகுள் பிக்சல் 7ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை விலையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இதில் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி ரூ.43,999 ஆக விற்பனையாகி வருகிறது.
அதோடு கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ம் தேதி அறிமுகமான கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.41,999 ஆக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் பிக் பில்லியன் டேஸ் சலுகையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையானது குறைக்கப்பட்டு விற்பனையாக உள்ளது.
அதன்படி, கூகுள் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலையானது ரூ.31,499 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 12,500 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல, கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் விலையானது ரூ.36,499 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இது கிட்டத்தட்ட ரூ.5,500 குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக ரூ.1,500 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் வங்கி சலுகைகள் உள்ளது. சேல் பிரைஸ் லைவ் என்பது ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக உள்ளது. இது கடந்த செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சேல் பிரைஸ் லைவ்வில் நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு பல சலுகைகள் உள்ளன. அதன்படி, நீங்கள் வாங்கும் ஸ்மார்ட்போன் ரூ.19,999 ஆக இருந்தால், அதன் விற்பனை விலை ரூ,15,999 ஆகும். இதில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபராக ரூ.5,000 வரை தள்ளுபடி, வங்கி சலுகையில் ரூ.1,000 தள்ளுபடி என மொத்தமாக ரூ.6,000 குறைக்கப்பட்டு, இறுதியான விற்பனை விலை ரூ.9,999 ஆக இருக்கும்.
இதற்கு நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது. இதில் மாதம் ரூ.2,499 செலுத்தி உங்கள் ஸ்மார்ட்போனை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஆனது அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…