Big Billion Days: அதிரடியான சலுகை.! ஐபோன் 14 பிளஸ் வாங்க சிறந்த நேரம் இதுதான்.!

iPhone 14 Plus

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் ஆனது அக்டோபர் 8ம் தேதி முதல் தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நாட்களில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் பல்வேறு எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை தள்ளுபடி விலையிலும், பல சலுகைகளுடன் பெறலாம். அந்தவகையில் ஏற்கனவே தயாரிப்புகளுக்கான சலுகைகளை காட்டத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் ஐபோன் 14 பிளஸ் மற்றும் மற்ற ஐபோன் மாடல்கள் மீதான சலுகைகள் ஐபோன் பிரியர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதன்படி, ஐபோன் 14 பிளஸ் 128 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போனின் சரியான விலையை ஃபிளிப்கார்ட் அறிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அந்த ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும் என்பதை கண்டுபிடிப்பதற்கான சவாலைத் தொடங்கியுள்ளது.

அதோடு, ‘லோயஸ்ட் பிரைஸ் லாக்’ என்ற புதிய அம்சத்தை ஃபிளிப்கார்ட் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் ஐபோன் அதிகமான விலையில் விற்பனை ஆகும் நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன்மூலம் மூலம் ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை சலுகை விலையில் லாக் செய்ய முடியும். இதற்கு ரூ.1,999 செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு, ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனை நீங்கள் முன்பதிவு செய்யும்பொழுது அந்த நாளில் எந்த விலையில் இருந்ததோ, விலை உயரும் நேரத்திலும் கூட அதே விலையில் வாஙகிக்கொள்ளலாம். இந்த தள்ளுபடி விலையுடன் வங்கி சலுகைகளும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் ரூ.60,000க்கும் குறைவான சலுகை விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்களில் ஆப்பிள் போன்களின் விலை ரூ.20,000க்கு மேல் குறையும். மேலும், வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.50,000 மற்றும் ரூ.60,000க்கு வாங்கலாம். தற்போது, இதே ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 73,999 ஆக உள்ளது. இதில் 6.7 இன்ச் அளவுள்ள சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது.

கேமராவைப் பொறுத்தவகையில் 12எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைட் கேமரா உள்ளது. செல்ஃபிக்காக 12 எம்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் A15 பயோனிக் சிப் இணைக்கப்பட்டுள்ள ஹெக்சா கோர் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் 14 பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமாக டைனமிக் ஐலேண்ட் ஸ்டைல் ​​​​நாட்ச்சைக் கொண்டுள்ளது.

இந்த ஐபோன் 14 பிளஸ் மட்டுமல்லாமல் ஐபோன் 12 மீதான விலையிலும் சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.38,999 மதிப்புள்ள 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 12 ஸ்மார்ட்போனை ரூ.32,999க்கு வாங்கலாம். இதில், வங்கி சலுகையாக ரூ.3,000 மும், எக்ஸ்சேன்ஞ் சலுகையாக ரூ.3,000 மும் குறைக்கப்பட்டு ரூ.32,999க்கு வாங்கிக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்