ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷாப்பிங் நிகழ்வான பிக் பில்லியன் டேஸ் ஆனது அக்டோபர் 8ம் தேதி தொடங்கி 4வது நாளாக நடந்து வருகிறது. அக்டோபர் 15ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விற்பனையின் போது பல முன்னணி நிறுவனங்களின் தயாரிப்புகள் மீது பல சலுகை மற்றும் தள்ளுபடியானது அறிவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் போகோ நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் அவற்றின் மீதான சலுகைகளை இப்போது பார்க்கலாம்.
போகோ எஃப் 5
போகோ எஃப் 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2 வேரியண்ட்களில் அறிமுகமானது. அதில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.34,000 என்ற விலையிலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.39,999 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. தற்போது பிக் பில்லியன் டேஸில் 8 ஜிபி வேரியண்ட் ரூ.22,999-க்கும், 12 ஜிபி வேரியண்ட் ரூ.25,999-க்கும் தள்ளுபடி மற்றும் சலுகையில் வாங்கி கொள்ளலாம்.
இதில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளே உள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 2 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில் முன்புறம் 64 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட், 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. நீந்த நேர உபயோகத்திற்காக 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சாதாரண நாட்களில் எக்ஸ் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.25,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.28,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 6 ஜிபி வேரியண்ட் ரூ.17,999 க்கும், 8 ஜிபி வேரியண்ட் ரூ.18,999 க்கும் வாங்கி கொள்ளலாம்.
எக்ஸ் 5 ப்ரோ ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் (16.94 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 108 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ராவைட், 2 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது. நீண்ட நேர உபயோகத்திற்காக 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
போகோ எம்6 ப்ரோ 5ஜி
எம்6 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.16,999 என்ற விலையிலும் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.9,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.11,999 க்கும் வாங்கி கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 6.79 இன்ச் (17.25 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி போர்ட்ரெய்ட் கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
போகோ எம்4 5ஜி
போகோ எம்4 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.15,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.18,999 என்ற விலையிலும் சாதாரண நாட்களில் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.10,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.12,999 க்கும் இப்போது வாங்கி கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் (16.71 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 700 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கொண்ட டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
போகோ சி55
போகோ சி55 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.13,999 என்ற விலையிலும் சாதாரண நாட்களில் விற்பனையாகிறது. இதனை ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் விற்பனையில், 4 ஜிபி வேரியண்ட் ரூ.6,999 க்கும், 6 ஜிபி வேரியண்ட் ரூ.7,799 க்கும் இப்போது வாங்கி கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போன் 6.71 இன்ச் (17.04 செ.மீ) அளவுள்ள எஃப்எச்டி+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் மூலம் இயங்ககூடிய இந்த போனில், முன்புறம் 50 எம்பி டூயல் ரியர் கேமரா உள்ளது. நீண்டநேர உபயோகத்திற்காக 5000 mAh லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…