ஸ்மார்ட் போன் வைத்து கொண்டிருக்கும் எல்லோரிடமும் நிச்சயம் பலவித ஆப்ஸ்கள் இருக்கும். பிளே ஸ்டோரில் புதிதாக ஒரு ஆப்ஸ் வந்தவுடனே அதை நம் மொபைலில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பார்ப்போம். இது பலரிடமும் உள்ள பழக்கமாகும். எவ்வளவோ ஆப்ஸ்கள் பிளே ஸ்டோரில் இருந்தாலும் அவற்றில் மிக சில ஆப்ஸ்கள் மட்டுமே தரமான செயலியாக உள்ளது.
அந்த வகையில் முகநூல், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸாப்ப் போன்றே இன்னொரு சமூக வலைத்தளமும் மிக பிரபலமாக உள்ளது. ஆனால், இதனை பலர் அறிந்திருக்காமலே உள்ளோம். இந்த அற்புத வலைத்தளத்தை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.
பின்டிரஸ்ட்
ஏற்கனவே உங்களிடம் இந்த சேவைக்கான அக்கவுண்ட் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே. இல்லையென்றால் இப்போதே இதில் உங்களின் மெயில் ஐ.டி மற்றும் இதர தகவல்களை சேர்த்து கொள்ளுங்கள். முகநூலில் பலவித எதிர்மறை கருத்துக்கள், வதந்திகள், சண்டை போன்றவற்றை பார்த்து பார்த்து நொந்து போனவர்களுக்கு தான் பின்டிரஸ்ட் வலைதளத்தின் அருமை தெரியும்.
காட்சி வடிவம்
மற்ற செயலியை போன்றோ, வலை தளத்தை போன்றோ இது கிடையாது. இது முற்றிலும் மாறுபட்டது. “காட்சி வடிவம்” தான் இந்த சேவையின் மூலதனமே. எல்லா தகவல்களும் காட்சி வடிவில் இதில் இடம் பெற்றிருக்கும். போட்டோ-களை சுவரில் ஆணி அடித்து மாட்டுவது போல இந்த வலை தளத்தில் தகவல்களை அப்படியே காட்சி வடிவில் பின் செய்து கொள்ளலாம்.
கோடி கணக்கானோர்
இந்த சேவையை மாதம் தோறும் 25 கோடி பேர் பெற்று வருகின்றனர். இந்த சேவையை பயன்படுத்தினால் உங்களுக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகம் உண்டாகும். கூடவே, எப்போதுமே உங்களை சுற்றி சந்தோஷ அலைகள் சூழ்ந்திருக்கும்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…