உங்க போன்ல சார்ஜ் வேகமாக குறையுதா? இனிமே இந்த தப்புகளை மட்டும் பண்ணாதீங்க!

Battery Saving Tips

Battery Saving Tips : போனில் சார்ஜ் வேகமாக குறையாமல் இருக்க சில டிப்ஸ்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

போனில் இருக்கும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று சார்ஜ் வேகமாக குறைவது தான். ஏதாவது நாம் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டோ அல்லது கேம்ஸ் விளையாடி கொண்டு இருக்கும்போதோ வேகமாக குறைந்துவிடும். இப்படி இருப்பதால் நமக்கு பெரிய தலைவலியே வந்துவிடும். சார்ஜ் வேகமாக குறைவதை கட்டுப்படுத்த சில செயலிகள் இருப்பதாக நீங்கள் கேள்வி பட்டு அதனையும் முயற்சி செய்து இருப்பார்கள்.

அப்படி முயற்சி செய்தும் கூட சார்ஜ் வேகமாக தான் குறைந்து இருக்கும்.   இருந்தாலும் நம்மளுடைய போனில் சார்ஜ் வேகமாக குறையாமல் இருக்க சில வழிகளை நாம் பின்பற்றினால் ஓரளவுக்கு சார்ஜ் மெதுவாக குறையும். அதற்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதனை விவரமாக இப்போது பார்க்கலாம்.

முதலில் நீங்கள் ப்ளூடூத், வைஃபை, லொகேஷன் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும்போது மட்டும் ஆன் செய்துவிட்டு மற்ற நேரங்களில் ஆஃப் செய்து வைப்பதன் மூலம் உங்களுடைய பேட்டரி பயன்பாடு குறையும். நம்மில் பலரும் இதனை கவனிக்காமல் ப்ளூடூத், வைஃபை, லொகேஷன் உள்ளிட்டவைகளை பயன்படுத்திவிட்டு அப்படியே ஆஃப் செய்யாமலே விட்டுவிடுவோம். இதனால் நம்மளுடை பேட்டரி அதிக அளவில் வேலை செய்கிறது. எனவே, இதன் காரணமாகவும் போனின் சார்ஜ் வேகமாக இறங்கிவிடும்.

இதனை எல்லாம் தேவையான நேரத்தில் மட்டும் பயன்படுத்திக்கொண்டு அதன் பிறகு ஆஃப் செய்து வைப்பது நல்லது. அடுத்ததாக நம்மில் பலரும் தெரியாமல் செய்யும் தவறு தான் என்று கூட சொல்லலாம். அது என்னவென்றால், சார்ஜ் நமது போனில் குறைந்த பிறகு அதாவது 0-க்கு வந்தவுடன் சார்ஜ் 100 வரை போடுவது தான். இப்படி போடவே கூடாது சரியாக 15 % வந்த பிறகு சார்ஜ் போட்டுவிட்டு 85 % ஆன பிறகு போனை எடுத்து உபயோகம் செய்து பழகினால் நமது பேட்டரியின் வாழ்கை ( battery life) நன்றாக இருக்கும்.

0 % ஆன பிறகு சார்ஜ் செய்வது மிகவும் தவறு ஏற்கனவே நமது பேட்டரி ரொம்பவே குறைந்து போய் இருக்கும் நிலையில், அந்த சூழலில் சார்ஜ் செய்தால் நமது பேட்டரி அடி வாங்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, 15 % வந்த பிறகு சார்ஜ் போட்டுவிட்டு 85 % ஆன பிறகு போனை எடுத்து உபயோகம் செய்து பழகுங்கள்.

அதைப்போல நமது போனில் தேவை இல்லாமல் சில செயலிகள் இருக்கும். அதாவது நீங்கள் பயன்படுத்தி கொண்டு இருப்பது சில செயலியாக தான் இருக்கும் ஒரு சில செயலிகள் நீண்ட மாதங்களாக உபயோகம் செய்யாமலே வைத்து இருப்பீர்கள் அதனை கண்டுபிடித்து உடனே உங்களுடைய போனில் இருந்து நீக்குங்கள். அந்த பயன்படுத்தப்படாத செயலிகள் உங்களுடைய சார்ஜ் -ஐ குறைக்கும். அதாவது பேக்ரவுண்டில் ரன் ஆகி கொண்டு இருப்பதன் காரணமாக சார்ஜ் குறையும்.

அதைப்போல முடிந்த அளவிற்கு உங்களுடைய போனின் ஒரிஜினல் சார்ஜரை வைத்து போனை சார்ஜ் செய்யுங்கள். வேறு பிராண்ட் போன்களின் சார்ஜரை வைத்து சார்ஜ் செய்வதை தவிர்த்து விடுங்கள். மற்ற பிராண்டுகளின் சார்ஜரை வைத்து உங்களுடைய போனை சார்ஜ் செய்தால் மிகவும் மெதுவாக ஏறும். அதைப்போல பேட்டரி வாழ்க்கையும் அந்த அளவிற்கு நீண்ட நேரம் நிற்காது. எனவே, இது உங்களுடைய பேட்டரி வாழ்க்கையை பாதிப்படையவைக்கும். எனவே முடிந்த அளவிற்கு உங்களுடைய சார்ஜரை வைத்து போனை சார்ஜ் செய்து கொள்ளுங்கள். இதனை எல்லாம் பின்பற்றினாலே உங்களுடைய போன் சார்ஜ் வேகமாக குறைவது நிற்கும். எனவே, கண்டிப்பாக நாங்கள் சொன்ன இந்த டிப்ஸ்களை பலோவ் செய்து பாருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்