ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது!

WhatsApp

Whatsapp : ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து புதிய, புதிய அப்டேட்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டு வந்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Read More – இன்றுடன் சேவையை முடித்து கொள்கிறது PayTM.. இருந்தும் பணப்பரிவர்த்தனை செய்யலாம்…

இந்த சூழலில், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷாக்கிங்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், மற்றவர்களின் ப்ரொஃபைல் பிக்ச்சரை (full profile picture) ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது என கூறியுள்ளது. இந்த அம்சம் உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது.

Read More – ஸ்மார்ட் வாட்ச் டிசைனை மாற்ற போகும் சாம்சங் கேலக்சி ..! ஆப்பிளுடன் போட்டியா .?

ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பில் ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்கும்போது, பிளாக்-அவுட் ஸ்கிரீன் ஷாட்களைப் பெறுவார்கள். இந்த அம்சம் iOS சாதனங்களுக்கு கிடையாது. இருப்பினும், பயனர்கள் ப்ரொஃபைல் பிக்ச்சரை தான் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது. ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Read More – போனிலே பக்கவா எடிட் பண்ணனுமா? உங்களுக்கான தரமான 3 ஆப்ஸ் இதோ!

இந்த அம்சம் ஏற்கனவே உள்ள தனியுரிமை விருப்பங்களை நிறைவு செய்கிறது. பயனர்கள் தங்கள் ப்ரொஃபைல் பிக்ச்சரை யார் பார்க்கலாம் என்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. கடந்த மாதம், வாட்ஸ்அப் புதிய (chat search feature) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது உரையாடல்களை தேதி வாரியாக பார்க்கும் அம்சத்தை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்