Realme C5 5G[file image]
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது.
ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து அதிரடி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது தற்போது மினிமம் பட்ஜெட்டில் ஒரு அதிரடியான 5ஜி போனை ரியல் மீ வெளியிட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ரியல்மி தனது ரியல்மி P1 சீரியஸ் போனை வெளியிட்டது. அந்த வரிசையில் ரியல்மி சி65 5ஜி போனை இன்று 4 மணி அளவில் வெளியிட்டுள்ளது. இதன் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
இது மீடியாடெக் டி6300 சிப்செட்டால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை உலகின் முதன் முதலில் டி6300 சிப்செட்டால் உருவாக்கப்பட்ட போன் ஆகும். இது 4 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 64 ஜிபி ஸ்டோரேஜ் என 3 மாடலில் கிடைக்கிறது. மேலும், இது தண்ணீர் மற்றும் தூசியை எதிர்க்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 டிபி வரையில் இதனது ஸ்டோரேஜை அதிகரித்துக் கொள்ளும் திறன் உட்பட பல அம்சங்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன. மினிமம் பட்ஜெட்டில் இது போன்ற தண்ணீர் மற்றும் தூசியை எதிர்க்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட போன் கிடைப்பதெல்லாம் மிகவும் அரிதானதே ஆகும்.
ஸ்க்ரீன் :
இந்த ரியல்மி சி65 ஸ்மார்ட் போன் 6.67 இன்ச் டிஸ்பிளே மற்றும் 720×1604 பிக்சல் காட்சிப்படுத்தும் திறன் ஆகியவையும் உள்ளடக்கி உள்ளது. இதனால் தெளிவான ஒரு காட்சிகளில் நம்மால் ஆன்லைனிலும், டவுன்லோட் செய்து ஆப்லைனிலும் நம்மால் பார்க்க முடியும்.
கேமரா :
இதனது கேமரா பற்றி கூறினால் பின்புறத்தில் 50 எம்பி AI கேமராவும், மற்றும் 2 எம்பி ஜுமிங் கேமராவும் உள்ளது. அதே போல், முன்பக்கத்தில் 8 எம்பி செல்ஃபி கேமராவை கொண்டு களமிறங்கியுள்ளது.
பேட்டரி :
ரியல்மி சி65 ஸ்மார்ட் போன் 5000 mAh பேட்டரி துணையுடன் இறங்குகிறது. மேலும் இந்த போனுடன் 15w சார்ஜரும் இணைந்தே வருகிறது. இதனால் நம்மால் ஓரளவுக்கு விரைவாக சார்ஜ் செய்துகொள்ள முடியும்.
ஓஎஸ் மற்றும் பிற விவரங்கள் :
ரியல் மி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் போன், ரியல்மி 5.0 ஆண்ட்ராய்ட் 14 உடன் வருகிறது மேலும் ஆண்ட்ராய்ட் 15 அதை தொடர்ந்து வரும் அப்டேட்கள் வந்தாலும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளும் திறனும் இதில் உள்ளது. மேற்கொண்டு இந்த போன் 190 கிராம் எடையில் உருவாக்கி உள்ளனர். இதனால் எடை குறைந்த ஒரு பொருளை தூக்குவது போன்ற உணர்வுதான் தோன்றும்.
மேலும், இதன் டிஸ்ப்ளே மூலம் உண்டாகும் 120Hz அளவிலான ப்ளூ லைட், கண்களுக்கு சேதத்தை தவிர்க்கும் என கூறியுள்ளனர் மேலும் அதற்காக தர சான்றிதழயும் பெற்றுள்ளது இந்த் ரியல்மி ஸ்மார்ட் போன் (TUV Low Blue Light Certificate). அதை தொடர்ந்து 5ஜி நெட்ஒர்க் சப்போர்ட் உள்ளது இதனால் 3 ஜிபி பதிவிறக்கம் செய்யும் திறனும் உள்ளது.
ரியல்மியின் இந்த ஸ்மார்ட் போன், பிளிப்கார்ட் (Flipkart) விற்பனைத்தளத்தில் இன்று மாலை 4 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்ட இந்த போன் நம்மை ஆச்சர்ய படுத்தும் வகையில் ரூ.10,000/- விற்கப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் போனுக்கு நள்ளிரவு வரை சிறப்பு சலுகையும் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் மிகப்பெரிய இடத்தை தக்கவைக்கும் முயற்சியுடன் மினிமம் பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இதனுடன் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இது பிற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் இந்த ஸ்மார்ட் போன் போட்டி தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…
டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…
கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…