அடடே…! இதிலும் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாமா ..!!

Published by
Dinasuvadu desk

யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதற்கான பல்வேறு காரணங்கள் இருக்கும். ஒரு முறை பதிவிறக்கம் செய்து விட்டால், உங்களுக்கு தேவையான நேரத்தில், இணையவசதி இல்லையென்றாலும் வீடியோக்களை பார்க்க முடியும்.

வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி எனக் கூறும் அதே வேளையில், அதற்கு நாங்கள் பொறுப்பேற்க இயலாது. இதன் நோக்கம் அனைவரும் ஆப்லைனில் வீடியோக்கள் பார்க்க வேண்டும் என்பதே தவிர, பதிப்புரிமையை மீறுவதற்காக அல்ல.

பதிப்பாளரின் முன்அனுமதி இன்றி பதிவிறக்கம் செய்யவேணடாம். வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பதை பதிப்பாளர் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என எண்ணிணால் பின்வரும் வழிமுறையின் மூலம் பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஆண்ராய்டு மற்றும் ஐ.ஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய யூடியூப் அனுமதிக்கிறது.

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் யூடியுப் செயலியை இயக்குங்கள்
  2. எதாவது ஒரு வீடியோவை திறங்கள்
  3. டைட்டிலுக்கு கீழே ‘Share’ மற்றும் ‘Add on’ இடையே ‘Download’ பட்டன் இருக்கும். இதன் மூலம் பதிப்பாளர் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறாரா என அறியலாம்.
  4. அந்த Download கிளிக் செய்தவுடன், நமக்கு தேவையான நேரத்தில் ஆப்லைனில் பார்க்கும் வகையில் வீடியோக்கள் பதிவிறக்கம் ஆகும்.

இப்போதைக்கு இம்முறை தான் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய சிறந்தது. அனைத்து வீடியோக்களுக்கும் இந்த வசதி கிடைக்காது.

விண்டோஸ், மேக், லினெக்ஸ் இயங்குதளங்களில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய 4K video downloader என்னும் இலவச செயலி கிடைக்கிறது. இதில் பதிவிறக்கம் செய்யும் போது வீடியோ ரெசல்யூசனை நாமே தேர்வு செய்யலாம்.

  1. 4K video downloader செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
  2. பதிவிறக்கம செய்ய வேண்டிய யூடியூப் வீடியோவின் URL ஐ காப்பி செய்து கொள்ளுங்கள்.
  3. 4K video downloader செயலியை திறந்து, Paste link எனும் பச்சை நிற பட்டனை அழுத்தவும்.
  4. பின்னர் வீடியோவை பார்ஸ் செய்து, பதிவிறக்கம் செய்ய தேவையான ரிசல்யூசன்கள் காட்டப்படும். அதில் ஒன்றை தேர்வு செய்து, Browse பட்டனை கிளிக் செய்து எங்கு பதிவிறக்கம் செய்யவேண்டும் என்பதை தேர்வு செய்யலாம்.
  5. பின்னர் Download பட்டனை கிளிக் செய்யவும். உடனே உங்கள் தேர்வுக்கு ஏற்ப வீடியோ பதிவிறக்கம் ஆக ஆரம்பிக்கும்.

இம்முறையை விண்டோஸ் மற்றும் மேக் ஓ.எஸ்-ல் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இன்றி செயல்பட்டது. அதிகப்படியாக 720p ரிசல்யூசன் கிடைக்கும் இது யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய சிறந்த முறை தான்.

இணைய உலாவி(Web browser) மூலம் எளிதாக பதிவிறக்கலாம்.

  1. https://www.vdyoutube.com தளத்திற்கு செல்லவும்.
  2. யூடியூப் வீடியோவின் URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.
  3. GO வை கிளிக் செய்யவும்
  4. பின்னர் சிவப்பு நிற Download பட்டனை கிளிக் செய்யவும்.
  5. பின்னர் MP4, 3GB போன்று தேவையான பார்மேட்டை தேர்வு செய்து வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம். இம்முறையில் 720P வீடியோக்களை எந்த சிரமமும் இன்றி பதிவிறக்கலாம்.

மேலும் அதிக ரெசல்யூசன் தேவைப்பட்டால், ஆடியோ இல்லாமல் வீடியோ பதிவிறக்கம் ஆகும்.இம்முறை ஆண்ராய்டு மற்றும் ஐ ஓ.எஸ்ல் பயன்படாது. ஆண்ராய்டு போனில், www.savefrom.net தளத்திற்கு சென்று, Desktop Site என மாற்றி (க்ரோமில் 3 புள்ளிகளை கிளிக் செய்து desktop site தேர்வு செய்யலாம்) மேற்கூறிய அதே வழிமுறையில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

5 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

8 hours ago