X
கடந்த ஜூலை மாதம் பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் என மாற்றம் செய்தார் எலான் மஸ்க். இதையடுத்து, பயனர்களுக்காக பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார். அதன்படி, ப்ளூடிக் சந்தா கட்டணம், கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பர வருவாய் திட்டம் என பலத்திட்டங்களை கொண்டுவந்தார்.
அதே போல நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள், விளையாட்டுகள், பலரின் கருத்துக்கள் போன்ற தகவல்களை தெரிந்து கொள்வதற்கும், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் பயன்படுத்தி வருகின்ற இந்த எக்ஸில், மற்றவர்களுடன் நேரடியாக பேசுவதற்கு மெசேஜ் செய்யும் வசதியையும் எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.
தற்போது, இதை இன்னும் மேம்படுத்தும் விதமாக, வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருப்பது போல, ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்து பேசும் வசதியை எக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக, எலான் மஸ்க் மற்றும் எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யாக்கரினோ இந்த வசதிகள் விரைவில் வரவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்த அம்சம் தொடர்பாக வெளியான பதிவில் இருக்கும் படத்தில், பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யலாம் என்பதை காட்டுகிறது. அதோடு அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதும் காட்டப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த அம்சம் ஒரு சில பயனர்களுக்கு இன்னும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
எக்ஸ் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் அம்சங்களில் இந்த ஆடியோ மற்றும் வீடியோ கால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இந்த அம்சம் ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு, மேக் மற்றும் பிசி சிஸ்டங்களில் வேலை செய்யும் எனவும் உங்கள் ஃபோன் எண்ணைக் கொடுக்காமலேயே உலகில் எங்கிருந்தாலும் நீங்கள் விரும்பும் நபரிடம் பேசலாம் எனவும் எலான் மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த அம்சம் கிடைத்திருப்பவர்கள் அதனை ஆன் செய்ய உங்களின் எக்ஸ் செயலியில் இருக்கும் செட்டிங்ஸிற்குள் செல்ல வேண்டும். பிறகு அதில் இருக்கும் பிரைவசி & சேஃப்டி என்பதை க்ளிக் செய்து டைரக்ட் மெசேஜ் என்பதற்குள் செல்ல வேண்டும். உங்களுக்கு இந்த அம்சம் கிடைக்கப்பெற்றிருந்தால் இதற்குள் எனேபிள் ஆடியோ மற்றும் வீடியோ கால் என்பதை க்ளிக் செய்து, ஆன் செய்வதன் மூலம் வீடியோ கால் செய்துகொள்ள முடியும்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…
தூத்துக்குடி : திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி தனது தூத்துக்குடி மக்களவை தொகுதி சார்ந்து முக்கிய அறிவிப்பு…