அட்ராசக்க…பட்ஜெட் விலையில் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..! விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!

Published by
பால முருகன்

மோட்டோரோலா எட்ஜ் 40 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்படும் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக புகழ் பெட்ரா ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான மோட்டோ நிறுவனம் ஆனது, அவ்வபோது அசத்தலான அம்சங்களை கொண்ட, ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இன்னும் சில நாட்களில் “Motorola Edge 40″ எனும் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகப்படுத்தவுள்ளது.

Motorola Edge 40:

Motorola Edge 40 ஸ்மார்ட்போன் ஆனது 6.55 இன்ச் பிஓஎல்இடி (P-OLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே  1080 x 2400 பிக்சல்களின் முழு எச்டி ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெபிரெசிங் ரேட்டையும் (Refresh rate) கொண்டுள்ளது. அதோடு, 1200 நிட்ஸ் பிரைட்னெஸ்ஸையும் கொண்டுள்ளது.

144Hz ரெபிரெசிங் ரேட்டுடன் வளைந்த டிஸ்ப்ளேவைக் கொண்ட அதன் பிரிவில் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். மேலும், இதில் 8 கோர்களை உடைய மீடியாடெக் டைமன்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020) பிராசஸர் உள்ளது. இதன் முன் பக்க கேமரா 32 எம்பியுடனும், பின்பக்கம் 50 எம்பி + 13எம்பி என இரண்டு கேமரா உள்ளது

பேட்டரி வசதி எப்படி..? 

இந்த Motorola Edge 40 ஸ்மார்ட்போன் 68W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. எனவே, இதன்மூலம் வேகமாக போனை ஜார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும், 8 ஜிபி ரேமுடன் வரும் இந்த மொபைல் 256 ஜிபி சேமிப்பகத்தைக் (Internal Memory) கொண்டுள்ளது.

எப்போது வருகிறது..? 

நிறுவனம் தனது முதல் மோட்டோரோலா எட்ஜ் 40 சீரிஸ் ஸ்மார்ட்போனை மே 23 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதன் விலை ரூ.40,000-க்கும் அதிமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலையை போலவே இந்த போனும் தரமாக தான் இருக்கும். ஏனென்றால், அதற்கு கொடுத்துள்ள அம்சங்கள் அப்படி. எனவே, Motorola போன் உபயோகம் செய்வர்களுக்கு இந்த Motorola Edge 40 போன் கண்டிப்பாக பிடிக்கும்.

Published by
பால முருகன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

7 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

7 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

7 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

8 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

8 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

8 hours ago