அடேங்கப்பா.! என்ன ஒரு திட்டம்…? பிஎஸ்என்எல்- ன் ஐபில் கிரிக்கெட் சீசன் கொண்டாட்டம்..!

Default Image

 

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவங்களின் ஐபில் கிரிக்கெட் சீசனின் அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து, அரசுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமும் அதன் ஐபில் கிரிக்கெட் சீசனின் திட்டமான ரூ.248/-ஐ அறிமுகம் செய்துள்ளது.

மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் ஐபில் கிரிக்கெட் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய உதவும் இந்த திட்டத்தின் செல்லுபடி காலமும் 51 நாட்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல்-ன் ரூ.248/- திட்டத்தை அணுகும் முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்கள் உள்ளன.அவை என்ன என்று காண்போம்.

  1. ஐபிஎல் 2018 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங்கில் காண உதவும் பிஎஸ்என்எல் ரூ.258/- ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும். அதாவது செல்லுபடியாகும் மொத்த காலத்திற்குள் 153 ஜிபி டேட்டாவை வழங்கும் என்று அர்த்தம்.
  2. பிஎஸ்என்எல்-ன் இந்த சிறப்பு சலுகையானது, ஏப்ரல் 30, 2018 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். அதாவது ஐபில் சீசனின் கடைசி 11 நாட்களுக்கு முன்பு வரை கிடைக்கும்.
  3. பிஎஸ்என்எல்-ன் ரூ.258/- ஆனது ஒரு குறிப்பிட்ட கால அளவிலான சலுகையாகும். இது ஐபிஎல் போட்டிகளை லைவ் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கும் ஒரு பிரத்யேக திட்டம் என்று, பிஎஸ்என்எல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் அர்த்தம் இந்த ரூ.258/- வழியாக எந்தவிதமான அழைப்பு நன்மைகளும் கிடைக்காது.
  4. இந்த பிஎஸ்என்எல் ரூ.248/- ஆனது நாடெங்கிலும் உள்ள அனைத்து ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கும் கிடைக்கும் ஒரு திறந்தவெளி சந்தை திட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஜியோ மற்றும் ஏர்டெல் இதேபோன்றதொரு ஐபில் லைவ் ஸ்ட்ரீமிங் சலுகையை, ரூ.251/-க்கு ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல், அதன் டிவி ஆப் வழியாக அனைத்து ஐபில் 2018 போட்டிகளையும் இலவச லைவ் ஸ்ட்ரீமிங் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்