பவர் பேக் கேமிங் ஃபிளாக்ஷிப் போன்.! Asus ROG-இன் புதிய சீரிஸ்..எப்போ அறிமுகம்.?
நடந்து வரும் 2023ம் ஆணு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனம் அடுத்த ஆண்டில் ஒரு தரமான வெளியீட்டுடன் கால் பதிக்கத் தயாராகி வருகின்றன. இதில் பிரபல கேமிங் மொபைல் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் (ASUS), அதன் புதிய கேமிங் சீரிஸான ஆர்ஓஜி போன் 8 சீரிஸ்-ஐ (Asus ROG phone 8 series) அறிமுகப்படுத்த உள்ளது.
இதற்கான வெளியீட்டுத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆர்ஓஜி போன் 8 சீரிஸ் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி மாலை 5 மணிக்கு சீனாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்போது வெளியாகியுள்ள டீஸர் புகைப்படத்திலிருந்து ஆர்ஓஜி போன் 8 சீரிஸ் ஆனது ஒரு புதிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது தெரிகிறது.
அதிரடி தள்ளுபடி..ஐபோன் 14 முதல் ரெட்மி 12 வரை.! Flipkart பிக் இயர் எண்ட் சேல் அசத்தல்.!
பின்புறம் ஒரு தனித்துவமான பென்டகோனல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலான ஆர்ஓஜி போன் 7-ல் மூன்று கேமராக்கள் கொண்ட கிடைமட்ட வரிசை இருக்கும். இந்த வடிவமைப்பு முற்றிலும் மாற்றப்பட்டு ஒரு நேர்த்தியான வடிவமைப்புடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலும் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மற்றபடி வழக்கம் போல ஆர்ஓஜி பிராண்டிங் ஆனது உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை அளிக்கும் வகையில், சிறப்பான செயல்பாட்டிற்காக புதிய ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இது கேமிங் செயல்திறனை மேம்படுத்தி, பயனர்களுக்கு தடையற்ற கேமிங்கை அளிக்கிறது.
ரெடியா இருங்க..இந்தியாவில் களமிறங்கும் போகோ சி65.! எப்போ தெரியுமா.?
இதில் அட்ரினோ 750 கிராஃபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதால் 60 முதல் 240 ஹெர்ட்ஸ் வரையிலான எப்பிஎஸ் ஆனது கேமிங்கின் போது கிடைக்கும். 6.78 இன்ச் பெரிய டிஸ்பிளே கொடுக்கப்படலாம். அதோடு 24 ஜிபி வரையிலான எல்பிடிடிஆர் 5 எக்ஸ் (LPDDR5X) ரேம் மற்றும் 1 டிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கலாம்.
ஒரு தடையற்ற கேமிங்கை அளிக்க 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6000mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படலாம். ஆர்ஓஜி போன்கள் என்றாலே எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். அதே போல இந்த ஆர்ஓஜி போன் 8 சீரிஸ் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் அறிமுகத்தின் மீது கேமர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.