பக்கவா இருக்கே! லீக்கான ‘Xiaomi 14 Ultra’ போனின் டிசைன்!

Xiaomi 14 Ultra

சியோமி நிறுவனம் அடுத்ததாக “சியோமி 14 அல்ட்ரா” (xiaomi 14 ultra) ஐ அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14  (xiaomi 14 ultra) மற்றும் சியோமி 14 ப்ரோ (xiaomi 14 ultra pro) ஆகிய மாடல்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனையடுத்து, சீரிஸ் என்னென்ன நிறங்கள் மற்றும் எவ்வளவு விலைக்கு வெளியாகும் என்பது குறித்த தகவல் லீக் ஆகி இருக்கிறது. அதனை பற்றி பார்க்கலாம்.

சியோமி 14 அல்ட்ரா (xiaomi 14 ultra)

  • சியோமி 14 அல்ட்ரா சீரிஸ் ஆனது  12GB + 256GB, 16GB + 512GB மற்றும் 16GB + 1TB ஆகிய உள்ளடக்கத்தை கொண்டு அறிமுகம் ஆகும் என தெரிகிறது.  இந்த போன் ஆனது ‘Qualcomm Snapdragon 8 Gen 3 SoC’ மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. Qualcomm Snapdragon 8  இருப்பதால் கேம் பிரியர்களுக்கு கண்டிப்பாக மிகவும் பிடிக்கும்.
  • 2K தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளவை இந்த போன் கொண்டுள்ளது. எனவே படம் மற்றும் வீடியோக்கள் பார்க்கும்போது ஒரு நல்ல உணர்வு கிடைக்கும்.
  • 50எம்பி கேமராவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.  32 எம்.பி முன் கேமராவை கொண்டுள்ளது. எனவே செல்பி பிரியர்களுக்கு இந்த போன் பிடிக்கும்.
  • இந்த போன் ஆனது 90W வயர்டு மற்றும் 50வார்ட்ஸ்  வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 5,180mAh பேட்டரி வசதியை கொண்டுள்ளது. எனவே,சார்ஜ் குறைந்துவிட்டால் கூட சீக்கிரமாக சார்ஜ் செய்து கொள்ளலாம். இது கருப்பு, வெள்ளை, பச்சை ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிகிறது.

அறிமுகம் எப்போது? 

இவ்வளவு அட்டகாசமான சிறப்பு அம்சங்களை கொண்டு இருக்கும் இந்த “சியோமி 14 அல்ட்ரா” சீரிஸ் இந்தியாவில் வரும் பிப்ரவரி 25-ஆம் தேதி அறிமுகம் ஆகும். எனவே, மேலே கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள் பார்த்துக்கொண்டு விருப்பம் என்றால் நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

5 நிமிடம் சார்ஜ்…38 மணிநேரம்…குறைந்த விலையில் தரமான ‘Redmi Buds 5’ அறிமுகம்.?

விலை என்ன? 

“சியோமி 14 அல்ட்ரா” இந்தியாவில் ரூ74,990-க்கு அறிமுகம் ஆகலாம் என கூறப்படுகிறது. விலை அதிகமாக இருந்தாலும் பல நல்ல அம்சங்களை இந்த போன் கொண்டுள்ள காரணத்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA
Coimbatore Tidel Park