சென்னை : ChatGPTயின் அடுத்தகட்ட வளர்ச்சியாக GPT-4o அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் ஏற்கனவே ChatGPT எனும் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது ஓபன் ஏஐ நிறுவனம் . GPT 4-இன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக GPT 4o எனும் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது.
GPT 4o வில் o என்பது omni என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மனிதனுக்கும் கணினிக்கும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சி என வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அமெரிக்கா சாண்ட்பிராசிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்வில் ஓபன் ஏஐ நிறுவன சிடிஓ மீரா முராட்டி கூறினார். GPT 4oவானது GPT 4-இன் அடுத்த கட்ட பரிமாணம் என்றும். இதனை வைத்து செய்தி வடிவிலான கட்டளைகள் மட்டுமின்றி குரல் மற்றும் வீடியோ பதிவுகள் வடிவிலான உள்ளீடுகளையும் கொடுத்து பயனர்கள் தங்களுக்கு தேவையான விருப்பமான விருப்பங்களை பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், எதிர்காலத்தில் நமக்கும் இயந்திரங்களுக்கும் இடையிலான தொடர்பை கருத்தில் கொண்டு இந்த புது தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளோம் என்றும், இது முந்தைய GPT 4இன் மேம்பட்ட வசதி என்றும் முராட்டி குறிப்பிட்டார்.
இதன் மூலம், வீடியோவில் இருந்து அதில் பதிவாகியுள்ள குரலை செய்தியாக தனியே பிரித்தெடுத்து, அதனை செய்தியாக மாற்றி, பின்னர் அதனை நமக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து மீண்டும் அதனை குரல் பதிவாக நம்மால் மாற்றியமைத்து கேட்க முடியும் என்றும், ஒரு புகைப்படத்தை உள்ளீடு செய்து அதனை முழுதாக ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
GPT 4oவானது ChatBot, GPT4 ஆகியவற்றின் அனுபவத்தை கொண்டு செயல்படும். அதாவது ஒரு வீடியோவில் இருந்து குரலை தனியாக பிரித்து எடுத்து அதனை செய்தியாக மாற்றியமைக்கும் போது, அந்த செய்தியை மொழிபெயர்க்க ChatBot உதவியை GPT 4o சார்ந்து இருக்கும்.
அதேபோல உண்மையான வீடியோவில் இருக்கும் அதே உணர்ச்சி, அதாவது ஒரு பாடல் வேற்று மொழியில் பாடப்பட்டிருப்பின், அதனை நமக்கு ஏற்றார் போல் மாற்றி அதே உணர்ச்சியோடு நாம் கேட்ட மொழியில் நமக்கு தரும் எனவும் முராட்டி கூறினார்.
இந்த GPT 4oவிடம் ஓர் புகைப்படத்தை கொடுத்தால், அது எந்த மாதிரியான புகைப்படம், அந்த புகைப்படத்தில் உள்ள குறியீடு என்ன போன்ற பல்வேறு தலைப்புகளில் தேடி நமக்கான பதிலை அதனால் கொடுக்க முடியும். இந்த அம்சங்களானது வருங்காலத்தில் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் ,
வருங்காலத்தில் நாம் நேரலையில் (Live) வேற்று மொழியில் வர்ணிக்கப்படும் ஒரு விளையாட்டை பார்க்கிறோம் என்றால், அதனை இந்த GPT 4o பயன்படுத்தி நமக்கு ஏற்ற மொழியில் அதனை மொழிபெயர்த்து அப்படியே நம்மால் நேரடியாக (Live) பார்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
சில சமயம் பயனர்கள் கொடுக்கும் மாதிரிகளானது சிக்கலானதாக இருக்கலாம். அதனை நிவர்த்தி செய்யவும் பயனர்களுக்கு மிக எளிதானதாகவும், இயல்பானதாகவும் அளிக்கவும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். இது ஒரு மிகப்பெரிய இலக்கின் முதற்படி ஆகும். என்று மீரா மராட்டி சான் பிராசிஸ்க்கோ நிகழ்வில் தெரிவித்தார்.
தற்போது GPT 4oவானது சுமார் 50 மொழிகளில் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், ChatGPTஐ விட இரண்டு மடங்கு வேகமானது என்றும், GPT 4 டர்போவை விட அதிக வரம்புகளை கொண்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது குறிப்பிட்ட அளவிலான நபர்களுக்கோ அல்லது ஒரு குழுவிற்கோ ஒரு சோதனை அடிப்படையில் முதலில் சோதிக்கப்பட்டு, பின்னர் சோதனை முடிந்த பிறகு பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…