உங்க பழைய ஸ்மார்ட்போன்-ஐ விற்க போறிங்களா..? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க…!
உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மறுவிற்பனை விலையை குறைக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் என்பது பெருமளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதன்படி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. அதிலும் பலருக்கு புதிய மொபைல் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
அதில் சிலர் புதிய மொபைல்களை முழுப்பணமும் கொடுத்து வாங்கி விடுகின்றனர். மேலும், சிலர் தான் வைத்திருக்கும் பழைய மொபைல்களை விற்றும் புதிய மொபைல்களை வாங்கி வருகின்றனர். அதிலும் பழைய மொபைல்களை விற்கும் பொழுது அதற்கு நல்ல விலை கிடைப்பது என்பது மிகவும் அரிது.
எனவே, உங்கள் பழைய மொபைல் போனின் விற்பனை விலையை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.
சேதத்தின் அளவு:
உங்கள் ஸ்மார்ட்போனின் விலையை பற்றி தீர்மானிப்பதற்கு ஸ்மார்ட்போனிற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் போனின் வெளிப்புறம் கீறல்கள், நிறமாற்றம் மற்றும் உடைந்த பின்புறம் ஆகியவற்றை வைத்து முடிவு செய்யப்படும். பின், போனின் செயல்பாடுகள் வைத்தும் விலை முடிவு செய்யப்படும். எனவே, எப்போதும் நல்ல தரமான கவர் கேஸைப் பயன்படுத்துவது நல்லது.
செயல்பாடாத பாகங்கள்:
ஸ்மார்ட்போனில் உள்ள செயல்படாத பாகங்கள், அதன் மறுவிற்பனை விலையை குறைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக, ஸ்மார்ட்போனில் உள்ள செயல்படாத வால்யூம் பட்டன்கள், செயல்படாத சிம் கார்டு மற்றும் மெமரி கார்டு ஸ்லாட்டுகள், ஹெட்போன் ஜாக்குகள் மற்றும் சார்ஜ் செய்யக்கூடிய இணைப்புகள் அடங்கும்.
வாங்கிய காலம்:
உங்கள் ஸ்மார்ட்போனின் விலையை தீர்மானிக்கும் மிக முக்கியமான ஒன்று உங்கள் மொபைலை எப்போது வாங்கப்பட்டது என்பது தான். எனவே, நீங்கள் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை விற்க விரும்பினால், பழைய ஸ்மார்ட்போன்களை வாங்குவதற்கு ஆர்வமுள்ளவர்களை கண்டுபிடிக்க வேண்டும். இத்தனை காரணங்களை நீங்கள் தவிர்த்தால் உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் மறுவிற்பனை விலை குறையாமல் போனை விற்கலாம்.