ரெட்மி 13சி 5ஜி வாங்கப் போறீங்களா.? இந்த லிஸ்ட் பார்த்து முடிவு பண்ணுங்க.!
ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.
ரெட்மி 13சி 5ஜி
இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.74 இன்ச் டாட் டிராப் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ், சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், ப்ராக்ஸிமிட்டி சென்சார், லைட் சென்சார், காம்பஸ் போன்றவை உள்ளன. கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஸ்டார்லைட் பிளாக், ஸ்டார்ட்ரெயில் கிரீன், ஸ்டார்ட்ரெயில் சில்வர் ஆகிய மூன்று நிறங்களில் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என 3 மாடல்களில் உள்ளது. 4ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.9,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் ரூ.11,499 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் ரூ.13,499 என்ற விலையிலும் உள்ளது.
வெறும் ரூ.15,000 பட்ஜெட்.. கடந்த வாரம் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!
போகோ எம்6 ப்ரோ 5ஜி
90Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சம்ப்ளிங் ரேட் மற்றும் 550 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.79 இன்ச் எப்எச்டி+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, சைடு மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், ஐபி53 ரேட்டிங் உள்ளது. அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 4 ஜென் 2 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
இந்த போனில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பவர் பிளாக், ஃபாரஸ்ட் கிரீன் ஆகிய வண்ணங்களில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.9,999 என்ற விலையிலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,999 என்ற விலையிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.14,999 என்ற விலையிலும் கிடைக்கிறது.
ரியல்மீ நர்சோ 60x 5ஜி
இந்த போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 680 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.72 இன்ச் எப்எச்டி+ ஐபிஎஸ் டிஸ்பிளே உள்ளது. ஆர்ம் மாலி ஜிபியு உடன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. மற்ற போன்களை போலவே கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.
33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நெபுலா பர்பிள், ஸ்டெல்லர் கிரீன் ஆகிய வண்ணங்களில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் உள்ளது. இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.12,999-க்கும், 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.14,499-க்கும் அமேசானில் விற்பனைக்கு உள்ளது.
5000mAh பேட்டரி..4ஜிபி ரேம்..வெறும் ரூ.14,000 தான்.! விவோவின் எந்த மாடல் தெரியுமா.?
ரெட்மி 12 5ஜி
90Hz ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்ட 6.79 இன்ச் எப்எச்டி+ டிஸ்பிளே உள்ளது. அட்ரினோ ஜிபியு உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. கேமரா அமைப்பில் 50எம்பி மெயின் கேமரா, 2 எம்பி ஏஐ டெப்த் கேமரா மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது.33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
பாஸ்டல் ப்ளூ, ஜேட் பிளாக் மற்றும் மூன்ஸ்டோன் சில்வர் ஆகிய வண்ணங்களில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் உள்ளது. இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.11,999-க்கும், 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.13,499-க்கும், 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.15,499-க்கும் விற்பனைக்கு உள்ளது.