டூர் போவதற்கு புதிய குரூப் உருவாக்குபவர்களா நீங்கள்.? வாட்ஸ்அப்பின் அட்டகாசமான வசதி இதோ…
வாட்ஸ்அப், எஸ்க்ஸ்பிரிங் குரூப் (Expiring Group) என்ற புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
உலகில் பல மில்லியன் பயனர்கள் பயன்படுத்தும் செய்தி தளமான மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப், அவ்வப்போது தங்களது செயலியில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி பயனர்களை குதூகலப்படுத்துவது வழக்கம். அந்த வகையில் எஸ்க்ஸ்பிரிங் குரூப் (Expiring Group) என்ற புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இது பெரும்பாலும் ஊர் சுற்றுவதற்கென்று குரூப் உருவாக்கும் பயனர்களுக்கு பெருமளவில் உதவும் வகையில் இருக்கும். இந்த அம்சம் மூலம் நீங்கள் தற்காலிகமாக உருவாக்கும் குரூப்களை செயலிழக்க செய்ய முடியும். குறிப்பாக பிறந்தநாளை ஏற்பாடு செய்வது, ஊர் சுற்றுவதற்கு திட்டமிடுவது போன்றவற்றிற்கு உருவாக்கப்படும் குரூப்களின் நேரம் முடிந்தவுடன் காலாவதி ஆகிவிடும்.
அதாவது அந்த குரூப்கள் உருவாக்கப்படும்போதே, அது எப்பொழுது செயலிழக்க வேண்டும் என்று தேவைக்கேற்றபடி ஒரு நாள், ஒரு வாரம் அல்லது குறிப்பிட்ட தேதி வரை இதில் உள்ளிட்டுக் கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உள்ளிட்ட நேரம் அல்லது நாள் முடிந்தவுடன், குரூப் தானாகவே செயலிழந்து விடும். மேலும் குரூப்பின் காலம் முடிந்துவிட்டதாக பயனர்களுக்கு தெரிவிக்கப்படும்.