யெஸ் பேங்க் பயனரா நீங்கள் ? அக்கௌன்ட்ல இனி இந்த பேலன்ஸ் இருந்தே ஆகணும் ..இல்லைனா ..?

YesBank

Yes Bank : யெஸ் பேங்க்கில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள்  தங்களது கணக்கில் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்துருக்க வேண்டும் என்று ஒரு சில மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளனர். இது குறித்த தக்க விவரங்களை பற்றி இதில் பார்ப்போம்.

இதற்கு முன்னதாக, எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) வங்கிகளில் டெபிட் கார்டு பராமரிப்பு கட்டண (Debit Card Maintenance Charges) விவரங்கள்  கொண்டுவரப்பட்டது. அதே போல தற்போது யெஸ் பேங்க் (Yes Bank) வங்கியில் பல்வேறு கணக்கை வைத்திருக்கும் பயனர்கள் தங்களது கணக்குகளில் (Account) எவ்வளவு மினிமம் பாலன்ஸ் (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்க வேண்டும் என்ற பட்டியலை யெஸ் பேங்க் வங்கி வெளியிட்டுள்ளது.

இதே போல மற்ற வங்கிகளும் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், யெஸ் பேங்க் தங்களது பராமரிப்பு கட்டண விதி (minimum balance) விவரங்களை வெளியிட்டு உள்ளது. மேலும், இந்த விதிகள் வருகிற மே-1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

யெஸ் வங்கியில் ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கு (PRO Max Savings Account) வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 மினிமம் பேலன்ஸ் தொகை தங்களது கணக்கில் இருக்க வேண்டும் அதை பராமரிக்காதபட்சத்தில் அதிகபட்சமாக ரூ.1000 கட்டணம் தொகையாக விதிக்கப்பட்டள்ளது.

யெஸ் ப்ரோ பிளஸ் சேமிப்பு கணக்கு (YES PRO Plus Savings Account), யெஸ் எசன்ஸ் சேமிப்பு கணக்கு (Yes Essence Savings Account) மற்றும் யெஸ் ரெஸ் பெக்ட் சேமிப்பு கணக்கு (YES Respect Savings Account) போன்ற கணக்கை வைத்துருப்பவர்களுக்கு ரூ.25,000ஆக மினிமம் பேலன்ஸ் கணக்கில் இருக்க வேண்டும் அதை பராமரிக்காதபட்சத்தில் அதிகபட்சமாக ரூ.750 கட்டணம் விதிக்கப்பட்டள்ளது.

யெஸ் ப்ரோ சேமிப்பு கணக்கு (YES Pro Savings Account) வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ.10,000 மினிமம் பேலன்ஸாக தங்களது கணக்கில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதிகபட்சமாக ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. யெஸ் சேவிங் வேல்யூ (YES Saving Value), கிஷான் சேமிப்பு கணக்கு (Kisan Saving Account) ஆகிய இரண்டு வெவ்வேறு கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.5000 வரை மினிமம் பேலன்ஸ் தொகையாக வைத்துருக்க வேண்டும்.

ஒரு வேலை இந்த தொகையை பராமரிக்காமல் போனால் அதிகபட்சமாக ரூ.500 கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பிடிக்கப்படும். இறுதியாக மை ஃபர்ஸ்ட் யெஸ் சேமிப்பு கணக்கு (My First YES Savings Account) வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையாக ரூ.2500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை பராமரிக்காமல் போனால், அதிகபட்சமாக ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

கடைசியாக மை ஃபர்ஸ்ட் யெஸ் சேமிப்பு கணக்கு (My First YES Savings Account) வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் ரூ.2500 இருக்க வேண்டும். ஒரு வேலை இந்த தொகையை கணக்கில் பராமரிக்காமல் போனால் அதிகபட்சமாக ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.  இந்த விதிகள் எல்லாம் வருகிற மே 1 முதல் அமலுக்கு வந்துவிடும் என்று அறிவித்துள்ளனர்.

இதே போல மற்ற தனியார் வங்கிகளிலும் மினிமம் பேலன்ஸ்ஸில் பல்வேறு மாற்றங்கள் செய்து அதுவும் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால் நீங்கள் பயன்படுத்தும் எந்த வங்கியாக இருந்தாலும் அவற்றின் மினிமம் பேலன்ஸை சரியாக வைத்துக்கொள்வதே இது போன்ற கட்டணம் காட்டாமல் இருப்பதற்கு ஒரே தீர்வாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்