உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் AI தொழில்நுட்பம் பல துறைகளில் ஆச்சரியம் கலந்த பல சாதனைகளை படைத்து வருகிறது. இதில் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் சாயலை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது.
இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது, தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
டீப்ஃபேக் (Deep fake) உருவானது எப்படி..?
2014 இல் இயன் குட்ஃபெல்லோ மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட GAN என்ற தொழில்நுட்பத்தை இது சார்ந் துள்ளது. இந்த GAN என்பது ஜெனெரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான ஒரு முக்கிய அமைப்பாகும். GAN களால் மனித முகங்களின் புகைப்படங்கள் போன்று தோற்றமளிக்கும் படங்களை உருவாக்க முடியும்.
டீப்ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தின் தாக்கம்:
டீப்ஃபேக் (Deep fake) தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அதனை வைத்து நண்பர்களின் புகைப்படங்களை, நடிகர்களின் புகைப்படங்கள் போல மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.
ஆனால், தற்பொழுது பல பிரபலங்களின் முகம் அல்லது மற்றவர்களின் முகத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, ஆபாச வீடியோக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்வது போன்ற போலியான வீடியோக்களாக மாற்றி, பல தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக்குவதோடு, தனிநபர் மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பிற்கு கூட ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்.?
ஆராய்ச்சி நிறுவனமான சென்சிட்டி ஏஐயின் கூற்றுப்படி, 90 சதவீதத்திற்கும் அதிகமான டீப்ஃபேக் இணையதளங்களில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஒருவரை உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கிறது.
இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க மக்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலமும், டீப்ஃபேக்குகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலமும் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.
அவற்றினை கண்டுபிடிக்கும்வரை இதிலிருந்து மீள்வதற்கு உங்களது புகைப்படங்கள் வீடியோக்களை நம்பகத் தன்மையான இணையதளங்கள் மற்றும் செயலியின் பாதுகாப்பு தன்மையை அறிந்து பதிவிடுவதே ஒரே வழி.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…