தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதைக் கருத்தில் கொண்டு ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க அதன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நிறுவனம் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது,அதன்படி,கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வர் சில மணி நேரம் செயலிழந்த காரணத்தால் அதன் பல பயனர்களை நிறுவனம் இழந்தது.அதே சமயம், நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஃபேஸ்புக் ஈடுபட்டு வருகிறது.ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய பிற செயலிகளையும் வழிநடத்தி வந்த நிலையில்,இந்த […]
இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமார் 22 லட்சம் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாட்டிங் தளமான வாட்ஸ்அப்,இந்தியாவில் 2.2 மில்லியனுக்கும்(22 லட்சத்துக்கும்) அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.அதே சமயம் 560 புகார் அறிக்கைகள் பெறப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. திங்களன்று வெளியிடப்பட்ட அதன் சமீபத்திய அறிக்கையில், வாட்ஸ்அப் தளத்தில் 2,209,000 இந்திய கணக்குகள் செப்டம்பர் மாதத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.இந்த இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் ‘+91’ ஃபோன் எண் மூலம் […]
வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம். வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் […]
நவம்பர் 1 முதல் கீழ்க்கண்ட ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படுவதை நிறுத்துகிறது. வருகின்ற நவம்பர் 1 (திங்கள்கிழமை) முதல்,பல ஆண்ட்ராய்டு (கூகுளின் மொபைல் மென்பொருள்) சாதனங்கள் மற்றும் ஆப்பிள் தயாரித்த iOS சாதனங்களில் பிரபல மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்துகிறது. ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் அதற்குப் பின்னர் அறிமுகமான வெர்ஷன் உள்ள ஸ்மார்ட்போன்கள் மாடல்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. ஆப்பிளைப் பொறுத்தவரை, iOS 9 அல்லது அதற்கும் குறைவாக அமைக்கப்பட்டுள்ள ஆப்ரேடிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் […]
ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்றிரவு மீண்டும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் பாதிக்கப்பட்டன. பிரபல சமூக ஊடக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் சேவைகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டோபர் 4 ஆம் தேதி முடக்கப்பட்டன.இதனால்,உலகம் முழுவதும் சுமார் ஒருகோடியே 6 லட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனை சரிசெய்யப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. இதன் காரணமாக, பேஸ்புக்கின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. மேலும், மார்க் ஜுக்கர்பெர்க்கின் […]
1.5 பில்லியனுக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட தரவு டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் மற்றும் அதற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது.இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாயினர். இதனையடுத்து,இந்த முடக்கம் குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மன்னிப்புக் கோரியிருந்தார்.அதன்பின்னர்,6 மணி நேரம் முடக்கத்தான் காரணமாக மார்க்கத்திற்கு […]
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் 6 மணி நேரம் முடங்கியதால் டெலிகிராம் செயலிக்கு ஒரே இரவில் 7 கோடி பயனாளர்கள் கிடைத்துள்ளதாக டெலிகிராம் சிஇஓம் பாவல் துரோவ் தெரிவித்துள்ளார். மக்கள் தங்களது செய்திகளை பரிமாற்றம் செய்து கொள்வதற்கு பயன்படுத்தக்கூடிய வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செய்திகள் அக்டோபர் 4-ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் முடக்கப்பட்டது. இந்த முடக்கம் சுமார் 6 மணி நேரம் நீடித்த நிலையில், நெருக்கமானவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் […]
வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. 6 மணி நேரத்திற்கு பிறகு பிரச்சனைசரிசெய்யப்பட்டு மீண்டும் இயக்கம். மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியாமல் சிரமத்திற்கு உள்ளையாகினர்.இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் வாட்ஸப் வெப் ஆகியவை 5xx சர்வர் பிழை செய்தியை காட்டியது. இது குறித்து பதிவிட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸப் நிறுவனம் சிரமத்திற்கு மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி […]
2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மழையை கண்காணித்து கூறும் AI- அடிப்படையிலான ‘நவ் காஸ்டிங்’ அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தை விட மழைக்காலங்களில்,காய்ச்சல், ஜலதோஷம்,சளி போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உண்டு.அவ்வாறு இருக்க சில நேரங்களில் வானிலை முன்னறிவிப்புகள் கூட மழைக்கான வாய்ப்புகளைக் கணிப்பதில் சிறிது பின்தங்கி விடுகிறது.இதனால்,மழைக்கலங்களில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கனமழைகளில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில்,கூகுளுக்குச் சொந்தமான லண்டன் ஆய்வகமான டீப் மைண்டின் விஞ்ஞானிகள் செயற்கை நுண்ணறிவு […]
கூகுள் குரோம் ஜீரோ டே ஹேக்:கூகுள்,தனது குரோம் வலைப்பதிவில்,பாதிப்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளது. கூகுள் குரோம் பயனர்களுக்கு சில மோசமான செய்திகள் கிடைத்துள்ளன. அதாவது,கூகுளில் ஒரு முக்கியமான ஹேக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2 பில்லியனுக்கும் அதிகமான கூகுள் குரோம் பயனர்கள்,தங்கள் கூகுள் குரோமை புதுப்பிக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் கிட்டத்தட்ட அனைத்து கூகுள் குரோம் பயனர்களையும் ஹேக் செய்யும் அபாயத்தில் உள்ளது.கூகுள் குரோமில் புதிய பூஜ்ஜிய-நாள் சுரண்டல் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கூகுள் ஒரு வலைப்பதிவு இடுகையில் ஹேக் செய்ததை […]
ட்ரினிக் (Drinik)என்ற புதிய ஆண்ட்ராய்டு மால்வேர் பயனர்களின் மொபைல் வங்கி தரவு,பணத்தை திருடுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் பயனர்களைக் குறிவைத்து வங்கி தகவல்கள் மற்றும் பயனர் தகவல்களை திருட சைபர் குற்றவாளிகளால் ஒரு புதிய ஆண்ட்ராய்டு தீம்பொருள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் இணைய பாதுகாப்பு நிறுவனமான கணினி அவசர மறுமொழி குழு (CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்,இக்குழு தீம்பொருள் செயல்படும் விதம் குறித்து விரிவான அறிவிப்பை வெளியிட்டது.அதன்படி, புதிய மொபைல் […]
வாட்ஸ்-அப் பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள பேடிஎம்,ஜி-பே,போன்-பே(paytm,Gpay,phonepe) போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி,வாட்ஸ்-அப் நிறுவனமும் இந்திய பயனர்களுக்காக அதன் வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சத்தைச் சமீபத்தில் அறிமுகம் செய்தது இந்நிலையில்,பேமெண்ட் அப்டேட்டில் கேஷ்பேக் என்ற புதிய அம்சத்தை அதன் பீட்டா வெர்ஷனில் சோதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தைகைய புதிய வாட்ஸ்-அப் பேமெண்ட் அம்சம் இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்கு ஒரு முக்கிய பங்கு […]
பேஸ்புக் நிறுவனம் நடப்பாண்டில் முதல் 6 மாதங்களில் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரது கரங்களிலும், மொபைல் போனை பார்க்க முடிகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோரின் பொழுதுபோக்கு பூங்காவாக இருப்பது இணையதளம் தான். பேஸ்புக், வாட்சப், இண்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அனைவரும் ஒரு கணக்கை வைத்துள்ளனர். அந்த வகையில், சமூகவலைத்தள பக்கங்களில் பல போலி கணக்குகளும் உருவாகிறது. இதனால் பல பிரச்சனைகள் […]
போலி விமர்சனம் காரணமாக 600 சீன பிராண்டுகளை அமேசான் நிறுவனம் தடை செய்துள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான அமேசான் 600 சீன பிராண்டுகளை நிரந்தரமாக தடை செய்துள்ளது.அதே நேரத்தில் இந்த பிராண்டை விற்கும் 3000 விற்பனையாளர்களின் கணக்குகளும் அகற்றப்பட்டது.அமேசான் நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக செயல்பட்டதால் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்,இது தொடர்பாக,அமேசான் நிறுவனம் கூறுகையில்: “வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவம் வழங்க வேண்டும் என்பதற்காக கடினமாக அமேசான் உழைக்கிறது. எங்கள் தளத்தில் வாங்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் […]
பேஸ்புக் இந்தியா தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் ராஜினாமா செய்த அங்கி தாஸுக்கு பதிலாக,தனது புதிய பொதுக் கொள்கை இயக்குநராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும்,முன்னாள் ஊபர்( Uber) நிர்வாகியுமான ராஜீவ் அகர்வாலை நியமித்துள்ளதாக பேஸ்புக் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. அதன்படி,அகர்வால்,இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளின் பாதுகாப்பு, தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை, உள்ளடக்கம் மற்றும் இணைய நிர்வாகம் உள்ளிட்ட முக்கியமான கொள்கை மேம்பாட்டு […]
கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 ஆப்கள் மூலம் உங்கள் தகவல் கசிய வாய்ப்பு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் ப்ளே ஸ்டாரில் உள்ள 19,000 க்கும் மேற்பட்ட ஆப்கள்(apps) ஆபத்தானது என்று டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆப்கள் உங்கள் இருப்பிடம்,கடவுச்சொல் (password) உள்ளிட்ட தனிப்பட்ட தரவு கசிவு மற்றும் உங்கள் ஃபோனின் பாதுகாப்பை பாதிக்கலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனங்கள் படி,19,300 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு […]
இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளில் இன்ஸ்டாகிராம் சேவை இன்று முடக்கப்பட்டது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரபல சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் இன்று காலை திடீரென்று முடங்கியது. இன்று காலை 11 மணியளவில் சர்வர் கோளாறால் இன்ஸ்டாகிராம் சேவை இந்தியாவிலும், உலகின் சில பகுதிகளிலும் திடீரென முடங்கியதாக இணையதளங்களை கண்காணிப்பு வலைத்தளமான டவுன் டிடக்டர் கூறியது.குறிப்பாக,சுமார் 45% தங்களின் மொபைல்களில் இன்ஸ்டாகிராம் செயலி லோட் ஆகவில்லை எனவும், 33% வெப்சைட்டில் இன்ஸ்டாகிராம் […]
பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை கூகுள் நீக்கியுள்ளது. பல நாடுகளில் மிகவும் பிரபலமாகவுள்ள கிரிப்டோகரன்சி (Crypto Currency),சமீபத்தில் இந்தியாவிலும் பிரபலமாகிவிட்டது.காரணம்,பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்ஸிகளில் ஏராளமான மக்கள் முதலீடு செய்கிறார்கள். இந்நிலையில்,கூகுள் (Google) தனது பிளே ஸ்டோரிலிருந்து 8 ஆபத்தான செயலிகளை நீக்கியுள்ளது.ஏனெனில், கிரிப்டோகரன்சி செயலி என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் போனில் தீங்கு விளைவிக்கக்கூடிய தீம்பொருள்களை நிறுவி உங்கள் பணத்தைச் சுரண்டக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.எனவே,இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருந்தால் உடனடியாக […]
வாட்ஸ்அப்பில் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சம் 90 நாட்களுக்கு நீட்டிக்க சோதனை நடைபெற்று வருகிறது. பிரபல சமூக ஊடகமான வாட்ஸ்அப்பை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,வாட்ஸ்அப் காணாமல் போகும் செய்திகள் என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது,அது குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு அல்லது ஏழு நாட்களுக்குப் பிறகு செய்திகளை தானாகவே நீக்குகிறது. இந்நிலையில்,வாட்ஸ்அப்பில் காணாமல் […]
தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில்,தாலிபான்களின் பேஸ்புக் கணக்குகளை முடக்கப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டப்படி,தாலிபான்கள் பயங்கரவாத அமைப்பினர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கணக்குகளும் முடக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக,பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: “அமெரிக்க சட்டத்தின் கீழ் தலிபான் பயங்கரவாத அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் எங்கள் ஆபத்தான நிறுவனக் கொள்கைகளின் கீழ் […]