ஆப்பிள்-சாம்சங் நிறுவனங்களுக்கு சவால் விடும் ஒன்பிளஸ் 6 (ONEPLUS 6)…!

Default Image

8ஜிபி ரேம் + 256ஜிபி; மிக நியாயமான விலை; ஆப்பிள்-சாம்சங் காலி.!

ஒன்ப்ளஸ் 6(ONE plus6) ஸ்மார்ட்போன் ஹை-எண்ட் அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆப்பிளை விட மலிவான விலைக்கு கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த நிறுவனம். அந்நிறுவனத்தின் ஒன்ப்ளஸ் 5 மற்றும் 5டி வெற்றியை தொடர்ந்து, அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஒனப்ளஸ் 6 வெளியீடு சார்ந்த பணிகள் திவீரமாக நடைபெற்று வருகிறது. அதுவும் கூறப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது சில அற்புதமான வன்பொருள் மேம்பாடுகள் மற்றும் ஒரு பெரிய ஸ்க்ரீன்-டூ-பாடி விகிதம் (19: 9) கொண்டு ஒரு முற்றிலும் புதிய வடிவமைப்பு மொழியை வெளிப்படுத்தவுள்ளது என்பதால், அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான தகவலின்படி, ஒன்ப்ளஸ் 6 ஆனது 256ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்கும் மற்றும் அதன் விலை நிர்ணயம் சுமார் 749 அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.48,800/-) என்கிற புள்ளியில் இருக்குமென்பது கூடுதல் சுவாரசியம்.

நினைவூட்டும் வண்ணம், ஒன்ப்ளஸ் 5டி ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களில் – 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு – தொடங்கப்பட்டது. அதே வகையிலான சேமிப்பு விருப்பங்கள் வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனில் இடம்பெறுமென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வெளியான லீக்ஸ் புகைப்படத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் ஒரு பெரிய 256 ஜிபி உள் சேமிப்புடன் கூடிய மூன்றாவது மாறுபாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 6 ஆனது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 16எம்பி + 20எம்பி இரட்டை பின்புற கேமரா அமைப்பு, 6.2 அங்குல டிஸ்பிளே மற்றும் டாஷ் சார்ஜ் ஆதரவு ஆகியவைகளை கொண்டிருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்