முதல்முறையாக ஐபோன்களில் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம்!
ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்களில் குறைபாடுகள் இருப்பதாக முதல்முறையாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களில் செயல்திறன் குறைவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து இதுநாள் வரை மௌனம் காத்த ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஐபேட்கள், கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பது உண்மைதான் என்றும், எனினும் வாடிக்கையாளர்கள் இதனால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. ஆப்பிள் போனில் உள்ள ஆப் ஸ்டோர் மூலம் செயலிகளை தரவிறக்கம் செய்யாததால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com